'இந்த 2 வருஷமா தான் சுதந்திரமாக இருக்கேன்.. இதான் பெரிய வெற்றி'.. ஷாக் அளித்த சமந்தா
இரண்டு வருடங்களாக ஒரு படம் கூட செய்யாமல் தான் சுதந்திரமாக இருப்பதாக சமந்தா கூறி ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளார்.

'இந்த 2 வருஷமா தான் சுதந்திரமாக இருக்கேன்.. இதான் பெரிய வெற்றி'.. ஷாக் அளித்த சமந்தா
சமந்தா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக ஒரு படம் கூட செய்யவில்லை. ஆனால் தன்னுடைய பார்வையில் இந்த சுதந்திரமே உண்மையான வெற்றி என்றும், வெற்றியின் அர்த்தம் மாறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
நடிப்பில் கமிட் ஆகாத சமந்தா
சமீபத்தில் சமந்தா முதன்முதலில் தயாரித்த சுபம் திரைப்படம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சமந்தா கடைசியாக கதாநாயகியாக நடித்த படம் குஷி. இந்தப் படம் 2023 ஆம் ஆண்டு வெளியனது. அதன் பிறகு அவர் வேறு எந்த திரைப்படத்திலும் தோன்றவில்லை. சமீபத்தில் அவர் தயாரித்த சுபம் திரைப்படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்தார்.