“ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை!” மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை!” மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா

“ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை!” மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா

Malavica Natarajan HT Tamil
Nov 30, 2024 01:53 PM IST

நடிகை சமந்தாவின் தந்தை மரணமடைந்த நிலையில், அவர் கூறிய சில வார்த்தைகள் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

“ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை!” மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா
“ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை!” மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா

சமந்தாவிற்கு ஆறுதல்

இந்த துக்க சமயத்தில், பலரும் சமந்தாவிற்கு ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், அவரது முன்னாள் கணவர் அவரது திருமண ஏற்பாட்டில் குதூகலமாக ஈடுபட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் நாக சைதன்யாவை 7 வருடங்களாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் சமந்தா. இந்த ஜோடியைப் பார்த்து தமிழ், தெலுங்கு திரையுலகமே பொறாமைப்பட்ட நிலையில், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2021ம் ஆண்டு பிரிந்தனர்.

சைதன்யா சோபிதா நிச்சயதார்த்தம்

இதையடுத்து, சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்தார். இதுகுறித்த தகவல்கள் வெளியில் பரவ ஆரம்பித்ததை அடுத்து, சைதன்யாவிற்கும் சோபிதாவிற்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து இரண்டு குடும்பங்களும் நிச்சயசார்த்தம் செய்தனர்.

இதற்கான புகைப்படங்களை நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இதையடுத்து, சமீபத்தில் அவர்களது திருமணப் பத்திரிகைகள் வெளியாகி, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருமண சடங்குகள் கொண்டாட்டம்

வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களது திருமணம் நடக்க உள்ளதால், சைதன்யா- சோபிதா ஜோடிக்கு பாரம்பரிய சடங்குகளை செய்ய குடும்பத்தினர் ஆயத்தமாகினர். இதை முன்னிட்டு நேற்று சோபிதாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் மஞ்சள் சடங்கு நடத்தப்பட்டது.

சிவப்பு நிற சேலையில், பாரம்பரிய நகைகளை அணிந்து சோபிதாவும், குர்த்தா பைஜாமாவை அணிந்து சைதன்யாவும் மஞ்சள் சடங்கில் பங்கேற்றனர். ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் வீட்டில் இந்த திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், சமந்தாவின் தந்தை மறைவுச் செய்தியும் வெளியாகியது. இதனால், சமந்தா ஒரே சமயத்தில் இரு துயர்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் என பலரும் சமந்தாவிற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் ட்ரெண்ட் ஆகும் சமந்தா தந்தையின் கருத்து

முன்னதாக, சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பெற்ற போது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சமந்தாவின் தந்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவை வெளிப்படுத்தினார். அதில், "ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை இருந்துச்சு. அந்தக் கதை இனி இல்லை! எனவே, ஒரு புதிய கதையைத் தொடங்குவோம்; இதோ ஒரு புதிய அத்தியாயம்! என் வலியிலிருந்து மீள எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. வாழ்க்கை மிகவும் குறுகியது, அதே வலியுடன் உட்கார முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவர் மரணமடைந்த அதே நாளில் நாக சைதன்யாவின் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியதால், சமந்தாவிற்கு ஆறுதல் கூறும் விதமாக இந்த போஸ்ட்டை பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்,

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.