Samantha: தெலுங்கு துறைக்கு இது கண்டிப்பா தேவை.. முக்கியமான கோரிக்கை வைத்த சமந்தா!
Samantha: மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை அடுத்து சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samantha: திரையுலகம் என்பது வெறும் வண்ணமயமான உலகம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இதில் தீய செயல்களும் நடைபெறுகின்றன என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் பல சமயங்களில் தகவல் கொடுத்தாலும்.. பலரும் பொருட்படுத்துவதில்லை. மலையாள திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் ஊழல் அனைத்து துறைகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக மாறியுள்ளது.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்த அறிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் உள்ள நடிகர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். சமீபத்தில், இந்த அறிக்கைக்கு பதிலளித்த சமந்தா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டார்.
அதில், " தெலுங்கு திரையுலகில் உள்ள எங்கள் பெண்கள் அனைவரும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் உள்ள விமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் இந்த இயக்கத்திற்கு வழிவகுத்தன.
டோலிவுட் திரையுலகில் பெண்களுக்கான ஆதரவுக் குழுவான Voice of Women 2019 இல் அந்த WCC ஆல் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக துணைக்குழு அளித்த அறிக்கையை வெளியிட தெலங்கானா அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இது டோலிவுட் திரையுலகில் பணிபுரியும் பெண்களைப் பாதுகாக்க அரசும், தொழில்துறையும் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் “ என்று சமந்தா பதிவிட்டு உள்ளார்.
பாலியல் தொல்லை
மலையாள திரையுலகில் பெண்கள் துன்புறுத்தப்படுவது உண்மை தான் என்று ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது தெரிந்ததே. மூவி ஆர்ட்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அனைவரும் ராஜினாமா செய்தனர். நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.
தமிழ்த்துறையைச் சேர்ந்த சிலரும் பேசினார்கள். தமிழ் நடிகை குட்டி பத்மினி இந்த துறையில் தொல்லைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ஆண்டுகளாக நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
சமந்தா படங்கள்
சமந்தாவைப் பொறுத்தவரை, கணவர் நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்த பிறகு, அவர் தனது முழு கவனத்தையும் படங்களில் செலுத்தினார். ஒருபுறம், மயோசிடிஸ் நோயால் போராடும் அவர், மறுபுறம், தனது திரைப்படத் தேர்வுகளில் கவனமாகவும் முன்னேறுகிறார். அதன் ஒரு பகுதியாக, வருண் தவானுடன் அவர் நடிக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. இதுதவிர தயாரிப்பாளராக மாறியுள்ள சமந்தா, மா இந்தி பங்காரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் கதாநாயகியாகவும் தயாரிப்பாளராகவும் எந்த மாதிரியான வெற்றியை பெறுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்