Tamil News  /  Entertainment  /  Samantha Announces New Health Podcast And Resumes Work

Samantha: எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் இது..! வேறு லெவலில் கம்பேக் கொடுக்கும் சமந்தா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 12, 2024 02:30 PM IST

நடிப்புக்கு குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா சுமார் 15 மாதம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

ஹெல்த் போட்காஸ்ட் வழங்க இருக்கும் சமந்தா
ஹெல்த் போட்காஸ்ட் வழங்க இருக்கும் சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

உடல்நிலையை கருத்தில் கொண்டும், சில சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவும் இந்த ரெஸ்ட் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். அதன்படி வெளிநாடு பயணம், புத்துணர்ச்சி, சிகிச்சை என்றிருந்த சமந்தா தற்போது நடிப்புக்கு மீண்டும் திரும்புவதாக தனது சமூக வலைத்தளபக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனது தோழி ஒருவருடன் இணைந்து ஹெல்த் போட்கேஸ்ட் செய்ய இருக்கிறார் சமந்தா. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், " நான் மீண்டும் பணிக்கு திரும்புகிறேன். பணிக்கு இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக வேலையில்லாமல் இருந்தேன். ஆனாலும் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்தேன்.

இதுவொரு ஹெல்த் போட்காஸ்ட். இதன் மூலம் பணியை தொடங்குவது எதிர்பாராததாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாகவும், நான் விரும்பி செய்யும் செயலாகவும் அமைந்துள்ளது.

எனது போட்காஸ்டை இந்த வாரம் ரிலீஸ் செய்வதில் மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் உள்ளேன். இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதை நான் செய்வதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2022 அக்டோபர் மாதம் மயோசிடிஸ் பாதிப்பால் உடல் நல கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதுதொடர்பான சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாகவும் தெரிவித்தார். மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக எந்த நிலையிலும் தசையில் வீக்கம் ஏற்பட்டு, சோர்வாக உணர வைக்கும்.

இதையடுத்து தனது உடல் நல பாதிப்பில் இருந்து மீண்டு வருவது தொடர்பாக விடியோ, புகைப்படம் மூலம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வந்தார். இதையடுத்து தற்போது ஹெல்த் குறிக்கு விவரிக்கும் விதமாக போட்கேஸ்ட் மூலம் புதுவிதமாக கம்பேக் கொடுக்கிறார்.

சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டில் குஷி, சகுந்தலம் ஆகிய படங்கள் வெலியானது. ஹாலிவுட் டிவி சீரிஸான சிட்டாடல் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

தமிழில் சமந்தா நடிப்பில் கடைசியாக காத்துவாக்குல ரெண்ட காதல் திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டில் சமந்தாவின் புதிய கமிட்மெண்ட்கள் குறித்து அடுத்தடுத்து சர்ப்ரைசான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.