Samantha And Naga Chaitanya: விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா, நாகசைதன்யா! என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha And Naga Chaitanya: விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா, நாகசைதன்யா! என்ன நடந்தது?

Samantha And Naga Chaitanya: விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா, நாகசைதன்யா! என்ன நடந்தது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 07:45 AM IST

மும்பை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். விவாகரத்துக்கு பின்னர் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

விவாகரத்துக்கு பின் ஒரே நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வந்த சமந்தா - நாக சைதன்யா
விவாகரத்துக்கு பின் ஒரே நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வந்த சமந்தா - நாக சைதன்யா

நாக சைதன்யா - சமந்தா ஆகியோர் இந்திய அளவில் பிரபலமான ஸ்டார் தம்பதிகளாக இருந்து வந்தனர். இவர்களின் விவாகரத்து இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்திருந்தது.

ஒரே நிகழ்ச்சியில் நாக சைதன்யா - சமந்தா

விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து தங்களது பணிகளில் இருவரும் கவனம் செலுத்தி வந்தார்கள். பொது நிகழ்ச்சிகளிலும் தலை காட்டி வந்த போதிலும் இருவரும் இணைந்து எந்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது விவாகரத்துக்கு பின் முதல் முறையாக ஒரே நிகழ்ச்சியில் நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அமேசான் ப்ரைம் விடியோவின் நிகழ்ச்சி

அமேசாம் ப்ரைம் விடியோ சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் அந்த நிறுவனத்துக்காக தங்களது அடுத்த புரொஜெக்ட் குறித்த அறிவிப்பையும். அது தொடர்பான தகவல்களை பகிர்வதற்காகவும் வருகை புரிந்தனர்.

அதன்படி அமேசான் ப்ரைமில் ஸ்டீரிம் ஆக இருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப்சீரிஸின் அறிமுக நிகழ்ச்சி தொடர்பாக சமந்தா வருகை புரிந்திருந்தார்.

ஹாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா - ரிச்சர்ட் மேட்டன் நடிப்பில் சிட்டாடல் என்ற பெயரில் வெளியான வெப்சீரிஸின் இந்திய பதிப்பாக சமந்தா - பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் சிட்டாடல்: ஹனி பன்னி உருவாகியுள்ளது. இதில் வருண் தவானின் மனைவியாக சமந்தா நடித்துள்ளார். தி பேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் - டிகே சிட்டாடல்: ஹனி பன்னியை இயக்கியுள்ளார்கள்.

தூதா சீசன் 2

கடந்த ஆண்டு டிசம்பரில் அமேசான் ப்ரைம் விடியோவில் தூதா என்ற வெப்சீரிஸ் வெளியானது. இதில் நாக சைதன்யா, பூ படப்புகழ் பார்வதி, பசுபதி உள்பட பலரும் நடித்திருந்தார். இதையடுத்து தூதா சீசன் 2 குறித்த அறிவிப்புக்காக நாக சைதன்யா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேடையில் புரொமோஷன்

இந்த நிகழ்ச்சியில் தனிதனியே மேடையேறிய முறையே தங்களது புரொஜெக்ட் குறித்து பேசினார்கள் சமந்தாவும், நாக சைதன்யாவும். இவர்கள் இருவரும் மேடையேறியபோது பலத்தை கைதட்டல்களும், ஆரவாரங்களும் எழுந்தன.

அமேசானில் அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு புதிய தொடர்கள் வெளி வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த தூதா சீசன் 2, சமந்தாவின் சிட்டாடல் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக சைதன்யா தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து தாண்டெல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்தூ மோலெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

சமந்தா கம்பேக்

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, நடிப்புக்கு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் வழக்கமாக பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். சிட்டாடல் வெப்சீரிஸ் மூலம் கம்பேக் கொடுக்கும் அவர், மேலும் சில படங்களில் கமிட்டாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.