தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Samantha And Kajal Aggarwal Wishes Allu Arjun For His Wax Statue Unveiled At Madam Tussauds Dubai

Samantha And Kajal: அல்லு அர்ஜுனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன சமந்தா, காஜல் அகர்வால்..! எதற்காக தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 30, 2024 05:58 PM IST

துபாயில் இருக்கும் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மெழுகு சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இதை குறிப்பிட்டு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நடிகை சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா - காஜல் அகர்வால்
அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்த சமந்தா - காஜல் அகர்வால்

ட்ரெண்டிங் செய்திகள்

அல்லு அர்ஜுன் மெழுகு சிலை

இதையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்களை மெழுகு சிலையாக வடிவமைத்து நிறுவி வரும் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜுன் மெழுகு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் துபாய் கிளையில் அல்லு அர்ஜுன் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும் இந்த பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து இவரது சிலை நிறுவப்பட்டது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் உலா வந்தன. இதை பார்த்த பலரும் அந்த விடியோவை பகிர்ந்து வருவதுடன், அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

சமந்தா வாழ்த்து

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாவில் இதுதொடர்பாக சிறிய ரீல்ஸ் பகிர்ந்துள்ளார். Iconic என்று அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவியை டேக் செய்துள்ளார்.

2015இல் வெளியான சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்தார் சமந்தா. இதன் பின்னர் 2021இல் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடனமடினார் சமந்தா. இந்த பாடல் உலக பேமஸ் ஆனது.

காஜல் அகர்வால் வாழ்த்து

இதேபோல் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புஷ்போ போஸுடன் அமைக்கப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலைக்கு அருகே அதே போன்ற போஸில் நிற்கும் அல்லு அர்ஜுன் புகைப்படத்தை பகிர்ந்து, "மிகப் பெரிய மைல்கல்லை அடைந்ததற்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். அல்லு அர்ஜுன் #iconstarஆக இருப்பதற்கு இதுதான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆர்யா 2 படத்தில் அல்லு அர்ஜுன் - காஜல் அகர்வால் இணைந்து நடித்தார்கள். இதன் பிறகு 2014இல் எவடு படத்தில் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் இருவரும் நடித்தார்கள்.

புஷ்பா 2 ரிலீஸ்

அல்லு அர்ஜுன் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிக மந்தனா, ஃபகத் பாசில், பிரகாஷ் ராஜ், சுனில் உள்பட பலரும் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

குட்டி பிரேக்குக்கு பின் நடிப்பு பக்கம் திரும்பியிருக்கும் சமந்தா சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸ் இந்திய பதிப்பில் நடித்துள்ளார். அதேபோல் காஜல் அகர்வால், கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்