Samantha: சென்னை பின்னணியில் உருவாகும் ஆங்கில படத்தில் நடிக்கும் சமந்தா
தென்னிந்திய சினிமாக்கள், வெப் சீரிஸ் என கலக்கி வந்த நடிகை சமந்தா சென்னையை பின்னணி வைத்து உருவாகும் ஆங்கில படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சிட்டடெல் வெப்சீரிஸ் போட்டோஷுட்டில் சமந்தா
ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் வெப் சீரிஸான சிட்டடெல் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் டிகே இந்த தொடரை இயக்குகிறார்கள்.
இதேபோல் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இவர் நடித்துள்ள குஷி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை ஸ்டோரி என்கிற பெயரில் உருவாகும் ஆங்கில படத்தில் அவர் நடிக்கவுள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் டைமெரி என். முராரி எழுதிய அரேஞ்மெண்ட் ஆஃப் லவ் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது.
