Salman Khan: தமிழ் இயக்குநர் படத்தில் நடிகர் சல்மான் கான்?-நியூ லுக் போட்டோஸ் வைரல்
Bollywood: இந்தப் போட்டோக்களில் சல்மான்கான் ஒரு மிடுக்கான ஈர்க்கக்கூடிய உடல் மாற்றத்திற்கு மாறியிருப்பதைக் காணலாம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் புதிய வைரல் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சமீபத்தில், சல்மான் கான், அவரது தந்தை, மூத்த எழுத்தாளர் சலீம் கானுடன் மும்பையில் உள்ள அவரது இல்லமான கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் இருக்கும்போது எடுத்த சில போட்டோக்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் போட்டோக்களில் சல்மான்கான் ஒரு மிடுக்கான ஈர்க்கக்கூடிய உடல் மாற்றத்திற்கு மாறியிருப்பதைக் காணலாம். அவர் தனது வரவிருக்கும் பிராஜெக்ட்டுக்காக அவரது தோற்றத்தை இதுபோன்று மிடுக்காக மாற்றியிருக்கலாம் என தெரிகிறது.
இந்தப் புகைப்படத்தில் அவர் கருப்பு பனியன் அணிந்திருக்கிறார். அவர் தலையில் ஒரு தொப்பியையும் அணிந்திருக்கிறா்.
இவர் அடுத்ததாக இயக்குனர் விஷ்ணுவர்தனின் 'The Bull' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சல்மான் தற்போது சமீபத்தில் வெளியான ஆக்ஷன் திரில்லர் படமான 'டைகர் 3' படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
மனீஷ் ஷர்மாவால் இயக்கப்பட்ட, 'டைகர் 3' நவம்பர் 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது இப்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இப்படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'டைகர் 3' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பற்றி பிரத்தியேகமாகப் பேசிய சல்மான், "இது தீபாவளி நேரம் மற்றும் உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்தது, அனைவரின் ஆர்வமும் அதில் இருந்தது, இருப்பினும் எங்களுக்கு கிடைத்த வசூல் அற்புதமானவை. நாங்கள் மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்." என்றார்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் தமிழில் ஆரம்பம், பட்டியல், சர்வம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஷேர்ஷா என்ற தேசப்பக்தி படத்தின் மூலம் பான்-இந்தியா இயக்குநராக அறியப்பட்டுள்ளார்.
அடுத்து இவர் சல்மான் கானை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சந்தோஷ் சிவனுடன் நீண்டகாலமாக உதவியாளராக இருந்த விஷ்ணு வர்தன், 2003 இல் குரும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், அது பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை. இருப்பினும், அவரது அடுத்தடுத்த படங்களான, அறிந்தும் அறியாமலும் (2005), பாட்டியல் (2006), பில்லா (2007), ஆரம்பம் (2013) ஆகியவை அவரை நல்ல இயக்குநராக அடையாளம் காட்டியது. தர்மா புரொடக்ஷன்ஸின் கீழ் கரண் ஜோஹர் தயாரித்த ஷெர்ஷா (2021) மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார், அதற்காக அவர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.
விஷ்ணுவர்தனும் அவரது சகோதரரும் பள்ளியில் நடனம் மற்றும் நாடகம் போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்களில் பங்கேற்பார்கள். இயக்குனர் மணிரத்னம் தனது அஞ்சலி படத்தில் நடிக்க குழந்தைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவரது பள்ளி அவரது பெயரை பரிந்துரைத்தது, அந்தப் படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் அவர் சத்ரியன் (இளம் விஜயகாந்த் வேடத்தில்) மற்றும் மணிரத்னத்தின் இருவர் ஆகிய படங்களில் மீண்டும் நடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, மணிரத்னத்தின் படங்களின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், விஷ்ணுவர்தனை அவர் இயக்கிய தி டெரரிஸ்ட் படத்தில் நடிக்க அழைத்தார்.
டாபிக்ஸ்