Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல்

Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல்

Marimuthu M HT Tamil
Jan 16, 2025 04:28 PM IST

Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல் அளித்துள்ளார்.

Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல்
Cheyyaru Balu: சல்மான் கானை கொலை செய்யத்துடிக்கும் கும்பல்.. குறிவைக்கும் சீக்கியர்.. செய்யாறு பாலு தகவல்

இதுதொடர்பாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருப்பதாவது, ’’இந்திய நடிகர்களில் உச்ச கட்ட போலீஸ் பாதுகாப்பு சல்மான் கானுக்கு கொடுத்து இருக்காங்க.அதுதவிர, அவரே தனியார் ஆட்களை பாதுகாப்புக்கு வைச்சிருக்கார்.

குண்டு துளைக்காத கண்ணாடியை ரெடி செய்திருக்கார். அவர் வீடு இருக்கும் மும்பையின் பாந்த்ரா பகுதியில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு இருக்கிறது. சல்மான் உயிர் பயத்தில் அலைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பல திரைப்படங்களில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய அந்த நடிகர் சல்மான் கானுக்கு இப்படி ஒரு நிலைமையா என்றால் அதுதான் உண்மை. லாரன்ஸ் பிஷ்னாய் அப்படிங்கிற ஒருத்தருடைய கூட்டாளிகளை சமீபத்தில் பிடிச்சாங்க.

சல்மான் கானை கொலை செய்ய முயன்ற கும்பல்:

சமீபத்தில் சல்மான் கான் பண்ணை வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கும்போது, ஒரு கும்பல் அவரைத் தாக்க முயன்றது. அதில் இருந்து சல்மான் கான் தப்பினார். அதற்கு, லாரன்ஸ் பிஷ்னாய் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. லாரன்ஸ் பிஷ்னாய் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர். அவருக்கும் சல்மான் கானுக்கும் என்ன பிரச்னை எனப் பார்ப்போம். குறிப்பாக, நிழல் உலக தாதாக்களின் பிடியில் தான், பாலிவுட் திரையுலகம் இருக்கிறது.

நிழல் உலக தாதாக்களாக சித்திகரிக்கப்பட்ட வரதராஜ முதலியார் போன்றவர்கள், தமிழர்களுக்கு ஏதாவது பிரச்னையென்றால் பாதுகாக்கக் கூடியவர்கள்.

முழுநேர ரவுடியிசம் அவர் செய்தது கிடையாது. ஹாஜி மஸ்தான் என்னும் ஒருவர் இருந்தார். ராமநாதபுரத்தைச் சார்ந்த இவர் 8 வயதில் மும்பை சென்று, சாமானிய மக்களுக்குக் குரல் கொடுக்கும் நபராக மாறியிருந்திருக்கிறார்.

நான் படிச்சவரைக்கும் விலையுயர்ந்த பொருட்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காதபோது, எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி தமிழ் மக்களுக்கு நல்லது செய்திருக்கிறார்.

பாலிவுட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாவூத் இம்பராஹிம்:

அடுத்து தாவூத் இப்ராஹிம் மும்பையின் தாதாவாக வந்தபோது, பாலிவுட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அடுத்து மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவர் சிக்கியபோது, பாகிஸ்தான் சென்றார். அதன்பின், அருண் கவுலி வந்தார். அடுத்து போலீஸும் மத்திய அரசும் சேர்ந்து, மும்பை தாதாக்களை ஒழித்தது.

இன்றைக்கு ஸ்ரீதேவி பெரியளவில் வர, போனி கபூர் என்ற பின்புலம் இருந்தது. சுஷாந்த் சிங் ஒருவேளை, கபூரையும் கானையும் புகழ்ந்து இருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்கலாம். அவர் மிக யதார்த்தமாக இருந்தவர்.

சரி, சல்மான் கானின் பிரச்னைக்கு வருவோம். சல்மான் கானை கொல்ல லாரன்ஸ் பிஷ்னாய் குறிவைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், கடமானை கடவுளாக நாங்கள் கும்பிடுகிறோம். அவர் பொதுவெளியில் வந்து மன்னிப்புக்கேட்கவில்லை. அதனால் தான், சல்மான் கானை சுட்டு அந்த ரத்தத்தை மான் மீது தெளித்தால் தான், எங்களுக்கு, மனசு ஆறும் என்று லாரன்ஸ் பிஷ்னாய் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இப்படி தான் சுஷாந்த் சிங்குக்கும் மிரட்டல் வந்திருக்கிறது. அதேபோல் தான், சல்மான் கானும் அப்படி ஒருமிரட்டலைச் சந்தித்து இருக்கிறார். மேலும், குண்டு துளைக்காத கட்டடத்தில் தங்குகிறார், சல்மான்கான்.

கதையைச் சொல்வதே, அவருக்கு ஜூம் மீட்டிங்கில் தான். மேலும் படத்தை, இன்டோரில் எடுக்கச் சொல்லியிருக்கிறாராம்.

இது ஒருபுறம் இருக்க, ஷாருக்கான் மக்களோடு மக்களாக பயணிக்கிறார். உடன் நின்று செல்ஃபி எடுக்கிறார். ஆனால், சல்மான் கான் அப்படியில்லாமல் இருக்கிறார்’’ என்றார்.

நன்றி: செய்யாறு பாலு யூட்யூப்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.