‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!

‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 22, 2025 12:17 PM IST

சல்மான் கான் திருமணம் மற்றும் 59 வயதில் பணிபுரியும் சந்திக்கும் போது சவால்கள் குறித்து பேசி இருக்கிறார்.

‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!
‘59 வயசாச்சு.. உடலில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கு.. கல்யாணம் பண்ணி பிரிஞ்சா சொத்துல பாதி போயிரும்’ - சல்மான்கான்!

கல்யாணம் ஏன் செய்யவில்லை

நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் சர்மா அவர் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த சல்மான்கான் ‘ எனக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், நான் 59 வயதிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

என்னை திருமணம் செய்து கொள்ளும் நபர் என்னை பிரிய முடிவெடுத்து என்னுடைய பாதி பணத்தை எடுக்க முடிவு செய்தால், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை’ என்றார்.

வலியிலும் வேலை செய்கிறேன்.

மேலும் பேசிய அவர், ‘நான் ஒவ்வொரு நாளும் வெளியே சென்று என் எலும்புகளை உடைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விலா எலும்புகள் முறிந்துள்ளன.

ட்ரைஜீமினல் நியூரால்ஜியா (முகத்தில் உண்டாகும் ஒரு வகையான நரம்பு வலி)இருந்தபோதிலும் நான் வேலை செய்கிறேன், மூளையில் ஒரு அனீரிஸம் ( இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கம்), ஒரு ஏ.வி குறைபாடும் உள்ளது (தமனி சிரைகளில் ஏற்படும் குறைபாடு) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த போதும் நான் வேலை செய்வதை நிப்பாட்ட வில்லை.

திருமணமாகி என்னுடைய பார்டனர் ஏதாவது ஒரு கசப்பான தருணத்தில் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்தால், என்னிடம் இருப்பதில் அவர் பாதியை எடுத்துக்கொள்வார். நான் இளமையாக இருந்தபோது இது நடந்திருந்தால், அது நன்றாக இருந்திருக்கும். நான் அனைத்தையும் திரும்பப் பெற்றிருக்க முடியும். ஆனால் இப்போது…’ என்று பேசினார்.