ஜீவனாம்சத்திற்கு ஆசைப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தாரா மனைவி சாய்ரா பானு? வழக்கறிஞர் சொல்வது என்ன?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஜீவனாம்சம் பெறுவதற்காக சாய்ரா பானு விவாகரத்து பெற்றாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து: புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்ற செய்தி வைரலானது. இந்தத் தகவல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் வழக்கறிஞர் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், தற்போது வந்தனா ஷா ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு அவர்களின் குழந்தைகளின் காவல் மற்றும் விவாகரத்து மறுபரிசீலனை செய்வது குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை கவனிப்பது யார்?
விக்கி லால்வானியின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வழக்கறிஞர் வந்தனா ஷா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு ஆகியோரின் விவாகரத்து குறித்து பதிலளித்தார். அந்தப் பேட்டியில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுவும் பிரிந்தால் அவர்களின் மூன்று குழந்தைகளையும் யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய வந்தனா ஷா"இந்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இருவரிடமும் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் டீனேஜ் வயதினர். அவர்கள் யாருடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்" என்றார்.
சாய்ரா ஜூவனாம்சத்திற்கு ஆசைப்பட்டாரா?
விவாகரத்து உறுதி செய்யப்பட்டால், சாய்ரா பானுவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அதிக ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற செய்திகள் பரவுகின்றனவே அது உண்மையா ன விக்கி லால்வானி கேட்டார். அதற்கு பதிலளித்த வந்தனா, அது குறித்து தான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். ஆனால் சாயிரா பணத்துக்காக யோசிப்பவர் அல்ல. இருவரும் திருமணம் செய்து கொண்டு 29 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை சாயிரா பற்றி பொதுவெளியில் எந்த அவதூறான தகவல்களும் வந்ததில்லை என்றார்.
இருவரும் மீண்டும் இணைவார்களா?
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு விவாகரத்து பெற்று மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என்பதை வந்தனா ஷா நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படாது என்று நான் கூறவில்லை. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எப்போதும் காதல் பற்றி பேசுகிறேன். அவர்கள் இருவரும் அளித்த கூட்டறிக்கை தெளிவாக உள்ளது. அவர்கள் இருவரும் துன்பம் மற்றும் பிரிவு பற்றி பேசினர்.
அவர்கள் நிறைய யோசித்திருப்பர்
இந்த விவாகரத்து என்பது அவர்களுக்கு ஒரு நீண்ட பயணம். இந்த முடிவை எடுப்பதற்கு முன் நிறைய யோசித்திருக்க வேண்டும். ஆனால் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படாது என்று நான் ஒருபோதும் கூறவில்லை" என்று வந்தனா ஷா கூறினார்.
கடந்த 19ம் தேதி, ஏ.ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு, ரஹ்மானை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், இதை தனது எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
நாங்கள் மிகவும் நம்பினோம்
"நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.
நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும் போது. எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.