தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saindhavi: ‘கல்யாணத்துல ஜிவி கொடுத்த கிஃப்ட்; அந்த பூ வாடிருச்சு.. ஆனா அவர் தந்த லெட்டர் இன்னும்..’ - சைந்தவி எமோஷனல்

Saindhavi: ‘கல்யாணத்துல ஜிவி கொடுத்த கிஃப்ட்; அந்த பூ வாடிருச்சு.. ஆனா அவர் தந்த லெட்டர் இன்னும்..’ - சைந்தவி எமோஷனல்

Kalyani Pandiyan S HT Tamil
May 18, 2024 05:30 AM IST

Saindhavi: காரணம், அன்று என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கும். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது, நாங்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் உள்ளிட்ட அனைத்தும் எனக்கு நினைவுக்கு வரும் - சைந்தவி எமோஷனல்

Saindhavi: ‘கல்யாணத்துல ஜிவி கொடுத்த கிஃப்ட்; அந்த பூ வாடிருச்சு.. ஆனா அவர் தந்த லெட்டர் இன்னும்..’ - சைந்தவி எமோஷனல்
Saindhavi: ‘கல்யாணத்துல ஜிவி கொடுத்த கிஃப்ட்; அந்த பூ வாடிருச்சு.. ஆனா அவர் தந்த லெட்டர் இன்னும்..’ - சைந்தவி எமோஷனல்

ட்ரெண்டிங் செய்திகள்

கல்யாணத்தில் மறக்க முடியாத சம்பவம் 

அவர் பேசும் போது, “எனக்கு என்னுடைய கல்யாணமே மறக்க முடியாத ஒரு மொமண்டாகத்தான் இருந்தது. காரணம், கிட்டத்தட்ட 12 வருடங்களாக, நாங்கள் காதலித்து, காத்திருந்து, கல்யாணம் செய்து கொண்டோம்.  எனக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம்.

நான் அடிக்கடி எங்களது கல்யாண போட்டோக்களை எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பேன். அதை பார்க்கும் ஜிவி, எத்தனை முறைதான், இந்த போட்டோக்களை நீ மீண்டும் மீண்டும் பார்ப்பாய் என்று கேட்பார். அதற்கு நான், அந்த போட்டோக்களை பார்க்கும் போது, எனக்கு மீண்டும் அந்த மொமெண்டில் வாழ்வது போன்ற உணர்வு கிடைக்கிறது என்பேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும்.

சைந்தவி எமோஷனல்

காரணம், அன்று என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கும். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது, நாங்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் உள்ளிட்ட அனைத்தும் எனக்கு நினைவுக்கு வரும். கல்யாணத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு மொமண்டும் எனக்கு மிக மிக முக்கிய மொமண்டுகளாக இருந்தன. அதிலும் மறக்க முடியாத மொமண்ட் ஒன்று இருக்கிறது.

 அது, கல்யாணம் நடக்கும் அன்றைய காலை எனக்கு நலங்கு வைத்தார்கள். அந்த நிகழ்வு முடியும் தருவாயில், எனக்கு ஒரு மிகப்பெரிய பொக்கேவும், பாக்ஸ் நிறைய சாக்லேட்டையும் ஜிவி கொடுத்து அனுப்பினார். அதில் ஜிவி பிரகாஷ் ஒரு லெட்டரையும் இணைத்து இருந்தார். அந்த லெட்டரில் 12 வருடங்களாக என்னுடன் மிகவும் அன்பாக நீ இருந்ததற்கு நன்றி. 

இனி வரும் காலத்திலும்

இனிவரும் காலங்களிலும் நாம் இணைந்து இருப்போம் என்று எழுதியிருந்தார். அது எனக்கு மிக மிக முக்கியமான ஒரு மொமண்டாகும். அதை என்னால் மறக்கவே முடியாது. அந்த பூ தற்போது வாடிவிட்டது. ஆனால் அந்த பொக்கேவில், அவர் எழுதி அனுப்பி இருந்த லெட்டரை இன்று வரை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.” என்று பேசினார். 

தாங்கள் பிரிவதாக கூறி ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: 

இது குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டு, 

அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்துகொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்