‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’-சந்தீப் - தீபிகா சர்ச்சைக் குறித்து மறைமுகமாக பேசினாரா சைஃப் அலிகான்?
குழந்தைகளுடன் செலவிடும் அந்த அரைமணி நேரம் முக்கியமானது. எங்களுக்கு ஆண்டுக்கு நான்கு விடுமுறைகள் கிடைக்கும். என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது நான் வேலை செய்வதில்லை.

‘நோ சொல்றது முக்கியம்..ஃபேமிலி ரொம்ப முக்கியம்..’ - சர்ச்சைக்கு மறைமுகமாக பேசிய சைஃப் அலிகான்?
சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அனிமல் படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமான நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 20 கோடி சம்பளம், நாளொன்றிற்கு 8 மணி நேர வேலை செய்ய மறுத்தது, தெலுங்கில் வசனம் பேச மறுத்தது உள்ளிட்டவையே தீபிகா படுகோனே படத்தில் இருந்து தூக்கப்பட்டதிற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோனை மறைமுகமாக சாடி சந்தீப் ரெட்டி வங்கா பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘ ‘நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, அங்கு 100% நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் இருக்கிறது.
