Saif Ali Khan Health: இரண்டு இடத்தில் ஆழமான வெட்டு.. ஆபத்தான கட்டத்தில் இருந்த மீண்ட சைஃப் அலிகான்
Saif Ali Khan Health Update: வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் கத்தியால் தாக்குதலுக்கு உள்ளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பதுடன், அவர் கத்தியால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபலங்கள் பலரும் நடிகர் சைஃப் அலிகான் உடல்நிலை குறித்து விசாரித்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை விரைந்து பிடிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சைஃப் அலிகான் குழுவினர் தரப்பில் இருந்து நடிகரின் உடல் நிலை குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் வீட்டில் இருந்தபோது சைஃப் அலிகானை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சைஃப் அலிகானுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்
சைஃப் அலிகான் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் "சைஃப் அலிகானின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகங்களும் ரசிகர்களும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயம்.
தற்போது அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை முன்னேற்த்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலைமை குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரீனா வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியில் சைஃப் அலிகான் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார் என போலீசார் தரப்பு தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.
கொள்ளையில் ஈடுபட்ட நபர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டபோது அவர்கள் சைஃப் அலிகானை தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சைஃப் அலிகானுக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள்
கத்தியால் தாக்கியதில் உடலின் பல்வேறு பகுதிகளில் காயமடைந்த சைஃப் அலிகான் உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. சைஃப் அலிகானுக்கு ஆறு இடத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் இரண்டு இடங்களில் மிகவும் ஆழமாக ஏற்பட்டுள்ளது.
முதுகு தண்டுவாடம் அருகேயும் காயம் உள்ளது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. சிகிச்சை முழுவதுமாக முடிந்த பின்னர் தான் அவரது ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து முழுமையாக தெரிவிக்க முடியும் என்று லீலாவதி மருத்துவமனை சிஓஓ டாக்டர், நிராஜ் உத்தமணி தெரிவித்துள்ளார்.
ரியல் லைப் ஹீரோ
தன் உயிரையும் பொருப்படுத்தாமல் கொள்ளையர்களுக்கு எதிராக துணிகரமாக செயல்பட்ட சைஃப் அலிகான் செயலுக்கு இணையவாசிகள் அவரை ரியல் லைப் ஹீரோ என பாராட்டி வருவதுடன், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராதிப்பதாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
தெலுங்கு நடிகர்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், பாலிவுட் பிரபலங்கள் பலரும் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர் விரைவில் குணம் பெற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்