Saif Ali Khan: 6 இடங்களில் கத்திக்குத்து.. பதைபதைத்தமும்பை.. சைஃப் அலிகான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது! - யார் இவர்?
விஜய் தாஸ் இதற்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு மதுபான கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவரை இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருக்கின்றனர். - சைஃப் அலிகான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து வழக்கில், முக்கிய குற்றவாளியான விஜய் தாஸ் என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர்.
முக்கிய குற்றவாளி கைது
மும்பை தானே மேற்கு பகுதியில் உள்ள ஹிரானந்தனி எஸ்டேட்டில் இருக்கும் டி.சி.எஸ் கால் சென்டருக்கு பின்புறம், மெட்ரோ கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள தொழிலாளர் முகாமில் அதிகாரிகள் நடத்திய சோதனை நடத்தினர். அப்போது அவர் பிடிபட்டு இருக்கிறார்.
விஜய் தாஸ் இதற்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு மதுபான கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவரை இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட விஜய் தாஸ், பிஜோய் தாஸ் மற்றும் முகமது இலியாஸ் உள்ளிட்ட பல பெயர்களில் வலம் வந்திருக்கிறார்.
நடந்தது என்ன?
நடிகர் சைப் அலிகான் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் சத்குரு சரண் கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளில் தாக்குதல் நடத்தியவர் காட்சி பதிவாகி இருந்தது. சைஃப் அலிகானின் வீட்டு ஊழியர் எலியம்மா பிலிப்ஸ் என்கிற லிமா சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களை முதலில் பார்த்தவர் அவர்தான்.
ஆம், வீட்டிற்குள் மர்மநபர்கள் நுழைந்ததை பார்த்த அவர், அவர்களுடன் சண்டையிட்டு இருக்கிறார். இதில் அவர் அலற, அந்த சத்தம் கேட்டு அறையில் இருந்து எழுந்து வந்த சைஃப், அங்கு நடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, மர்மநபருடன் சண்டையிட்டு இருக்கிறார். இந்த சண்டையில், தான் வைத்திருந்த கத்தியை வைத்து சைஃப் அலிகானை உடம்பின் 6 இடங்களில் அந்த மர்மநபர் குத்திவிட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த அலிகானை அவரது மகனான இப்ராஹிம் அலி கான் மும்பையின் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
லிமா அளித்த வாக்குமூலம்
மும்பை போலீசாரிடம் லிமா அளித்த வாக்குமூலத்தில், தாக்குதல் நடத்தியவர்30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் 5 அடி 5 அங்குல உயரமுள்ள மெலிந்த, கருப்பு நிறமுள்ள நபர் என்று விவரித்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த வியாழன் காலை 9 மணியளவில் நீல நிற சட்டையில் தாதரில் உள்ள ஒரு கடையில் ஹெட்ஃபோன்களை வாங்குவது சிசிடிவி கேமராவில் சிக்கியது. முன்னதாக, அவர் பாந்த்ரா ரயில் நிலையத்திலும் காணப்பட்டார். அங்கு அவர் ரயிலில் ஏறியதாக கூறப்பட்டது.
கூடுதலாக, சைஃப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் கான், சைஃப் உடனான மோதலின் போது மர்ம நபர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், நடிகரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அதே நேரம் அவர், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த எந்த நகையையும் அவர் தொடவில்லை என்றும் கூறியிருந்தார்.
இடது கை மற்றும் கழுத்தில் இரண்டு ஆழமான காயங்கள் உட்பட ஆறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கான் பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்துஅவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை, மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தமானி செய்தியாளர்களிடம் கூறுகையில், சைஃப் ஒரு சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டு குணமடைந்து வருகிறார். "அவர் முற்றிலும் உற்சாகமாக இருக்கிறார். உண்மையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ளோம், "என்று பேசினார்.

டாபிக்ஸ்