Saif Ali Khan: சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை தூக்கிய போலீஸ் - வெளியான விடியோ
Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான நபர் குறித்த எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை

பாலிவுட் நடிகரான சைஃப் அலிகானை ஆறு முறை கத்தியால் குத்திய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன
சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகியிருக்கும் நபரை போலீசார் மும்பை பந்த்ரா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ரகசியம் காக்கும் போலீசார்
கைதான நபர் குறித்த எந்த தகவலும் போலீசார் வெளியிடவில்லை. தாக்குதல் நடத்தும் அளவுக்கு இருந்த உள்நோக்கம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் அந்த நபரிடம் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இருக்கின்றனவா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சைஃப் அலிகானை தாக்கியவர் கைது பின்னணி
மும்பை பந்த்ராவில் உள்ள சத்குரு ஷாரன் கட்டிடத்தில் 12வது மாடியில் வசித்து வந்துள்ளார் நடிகர் சைஃப் அலிகான். அவரது வீட்டில் நடிகருடன், மனைவி கரீனா கபூர், இரண்டு மகன்கள் உள்பட 5 பணியாளர்களும் உடன் இருந்துள்ளனர்.
இதையடுத்து ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடந்த கொள்ளை முயற்சியின்போது, சைஃப் அலிகான் ஆறு முறை கத்துகுத்து தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயத்துடன் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆபத்தான கட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் 10 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இதில் பிரவுன் நிறத்திலான காலர் டி-ஷர்ட் மற்றும் சிவப்பு நிற ஸ்கார்ப் அணிந்த நபர் சைஃப் அலிகான் குடியிருப்பு பகுதியில் இருந்து கீழே இறங்கிய காட்சிகள் இடம்பிடித்திருந்தன. அந்த நபர் நடந்து வந்தது அதிகாலை 2.33 மணி என்பதன் அடிப்படையில், அவர்தான் குற்றவாளி என சந்தேகித்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சைஃப் அலிகானை தாக்கிய பிறகு கையில் மரக்குச்சி மற்றும் நீண்ட ஹெக்ஸா பிளேடுடன் தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து சம்பவம் நடந்த 24 நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ள போலீஸார் மும்பை பந்த்ரா காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் பழுப்பு நிற டி-சர்ட், காலர் மற்றும் சிவப்பு ஸ்கார்ஃப் அணிந்திருந்ததால், கட்டிடத்தின் ஆறாவது மாடியில் படிக்கட்டுகளில் இருந்து வேகமாக கீழே இறங்கினார்.
பணம் கேட்டு மிரட்டல்
ஆயுதம் ஏந்திய வந்த நபர் முதலில் தாக்குதலில் ஈடுபட்டது சைஃப் இளைய மகனான ஜெஹ்வின் ஆயாவான் பிலிப் மீது தான். அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், கையில் ஆயுதத்துடன் இருந்த கொள்ளையன் ரூ.1 கோடி கேட்டார். அவர் வீட்டினுள் வலுக்கட்டாயமாக நுழையவில்லை. அதே சமயம் வீட்டில் எந்த பொருளையும் உடைக்கவும் இல்லை" என்றார். இருப்பினும் இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த அந்த நபர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே வந்திருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாபிக்ஸ்