Saif Ali Khan: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. உரிய நேரத்தில் உயிர் காப்பாற்றிய ஆட்டோ ட்ரைவரை சந்தித் சைஃப் அலிகான்
Saif Ali Khan Meets Auto Driver: உரிய நேரத்தில் தனது உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த ஆட்டோ ட்ரைவரை சைஃப் அலிகான் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தனது வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தியதில் தாக்குதலுக்கு உள்ளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்துள்ளார். பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நடிகர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சைஃப் அலிகான் தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ட்ரைவரை சந்துள்ளார்.
நன்றி தெரிவத்தி சைஃப் அலிகான்
கத்தியால் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் சைஃப் அலிகானுக்கு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து முழுவதுமாக குணமடைந்த அவர் தனது உயிரை உரிய நேரத்தில் காப்பாற்றும் விதமாக மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ட்ரைவர் பஜான் சிங் என்பவரை சந்தித்தார். ஆட்டோ ட்ரைவரின் வீட்டுக்கு சென்ற சைஃப் அலிகான், அவரது தாயாரும் நடிகையுமான ஷர்மிளா தாக்கூர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். ஆட்டோ ட்ரைவருடன் சைஃப் அலிகான் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
யாருமே ஆட்டோவை நிறுத்தவில்லை
அன்று இரவு சுமார் 3 மணி இருக்கையிஸ் பெண் ஒருவர் ஆட்டோவை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் யாரும் நிறுத்தவில்லை. கேட் வாசலில் இருந்து ஆட்டோ என்ற குரலும் எனக்கு கேட்டது. உடனடியாக நான் யூ டர்ன் அடித்து திரும்ப வந்து கேட் அருகே நிறுத்தினேன். ரத்தம் சொட்ட ஒரு நபரை துணியால் மறைத்தபடி அழைத்து வந்து லீலாவதி மருத்துவமனை செல்லுமாறு கூறினார்கள். நான் விரைவாக சென்று அவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். அதன் பின்னர் என் ஆட்டோவில் வந்தது சைஃப் அலிகான் என தெரியவந்தது. அவர் கழுத்திலும், பின் பகுதியில் ரத்தம் சொட்ட வெளியேறியது" என்று சம்பவம் பற்றி ஆட்டோ ட்ரைவர் பஜான் சிங் நினைவுகூர்ந்தார்.
சைஃப் அலிகான் கத்திகுத்து சம்பவம்
ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடிகர் சைஃப் அலிகான் கத்து குத்து தாக்குதலுக்கு உள்ளானார். அவர் மீது தாக்குதல் நடத்திய நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பதும், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக, சைஃப் அலிகான் வீட்டு பணியாளர்கள், இந்த நபர் கொள்ளையடிக்க வந்திருப்பதை கவனித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைப்பார்த்த சைஃப் அலிகான் கொள்ளையனை இறுக்கமாக பிடித்துள்ளாராம். அப்போது அவரது பிடியில் இருந்து தப்பிக்க தன்னிடமிருந்த கத்தியை வைத்து கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கொள்ளையன் குத்தியுள்ளான்.
பின்னர் தான் வந்து பாத்ரூம் ஜன்னல் வழியாகவே அவன் வெளியேறியுள்ளான். இதற்கிடையே காயத்தால் ரத்தம் வெளியேறிய நிலையில் சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கொள்ளையன் பிடிபட்டபோதிலும், அவனை பற்றி மூன்று நாள்களுக்கு போலீசார் முழு தகவலையும் கண்டறிந்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு உதவ கொள்ளை முயற்சி
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஷரிபுல், தற்செயலாக சைஃப்பின் வீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு பணக்காரரிடமிருந்து திருடி, கொள்ளைப் பொருளுடன் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்று, தனது நோய்வாய்ப்பட்ட தாய்க்கு உதவ வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார். இந்தக் குற்றத்துக்கான உடனடித் தூண்டுதல் என்னவென்றால், டிசம்பர் 15 அன்று தானே உணவகத்தில் ஜிதேந்திர பாண்டேவுக்குச் சொந்தமான மனிதவள நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்தபோது, ஷரிபுல் தனது வேலையை இழந்துள்ளார். செலவுக்கு கையில் பணமில்லாமல் இருந்த காரணத்தால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்