Saif Ali Khan: வீடு புகுந்து கொள்ளை முயற்சி.. கத்தியால் குத்தியதில் படுகாயம்.. பாலிவுட் ஹீரோவுக்கு நேர்ந்த கொடூரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saif Ali Khan: வீடு புகுந்து கொள்ளை முயற்சி.. கத்தியால் குத்தியதில் படுகாயம்.. பாலிவுட் ஹீரோவுக்கு நேர்ந்த கொடூரம்

Saif Ali Khan: வீடு புகுந்து கொள்ளை முயற்சி.. கத்தியால் குத்தியதில் படுகாயம்.. பாலிவுட் ஹீரோவுக்கு நேர்ந்த கொடூரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 16, 2025 09:51 AM IST

மும்பை பந்த்ரா பகுதியிலும் தனது மனைவியும், நடிகையுமான கரீனா கபூருடன் வசித்து வருகிறார் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான். அவரது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த நபருக்கு நடிகரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு புகுந்து கொள்ளை முயற்சி.. கத்தியால் குத்தியதில் படுகாயம்? பாலிவுட் ஹீரோவுக்கு நேர்ந்த கொடூரம்
வீடு புகுந்து கொள்ளை முயற்சி.. கத்தியால் குத்தியதில் படுகாயம்? பாலிவுட் ஹீரோவுக்கு நேர்ந்த கொடூரம்

ஜனவரி 16 (இன்று) அதிகாலை 2.30 மணிக்கு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருக்கையில் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது வீட்டில் இருப்பவர்கள் விழத்த சத்தம் கேட்டவுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சைஃப் அலிகானுக்கு கத்தி குத்து

சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிக்ச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது கொள்ளையர்களுடனான மோதலின் போது காயமடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மும்பை க்ரைம் பிரவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்" என மூத்த ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆழமான காயங்களுக்கு அறுவை சிகிச்சை

"அடையாளம் தெரியாத நபர்களால் சைஃப் அலிகான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதிகாலை 3.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது உடலில் ஆழமாக ஆறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. முதுகுதண்டுவாடம் அருகே காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை ஆபரேஷன் செய்து வருகிறோம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், காஸ்மடிக்ஸ் நிபுணர் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே அவருக்கு ஏற்பட்டிருக்கும் முழு காயம் குறித்து தெரிவிக்க முடியும்.

அதேபோல் சைஃப் அலிகான் கழுத்திலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு காலை 5.30 மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட தொடங்கியது" என்று லிலாவதி மருத்துவமனை சிஓஓ டாக்டர் நிராஜ் உத்தமணி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சைஃப் அலிகான் குடும்பத்தினர்

இந்த சம்பவத்தை தொடர்ந்து சைஃப் அலிகான் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் கூடியுள்ளனர். சைஃப் அலிகான், பாலிவுட் முன்னணி நடிகையான கரீனா கபூர் ஆகியோர் கடந்த 2012இல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மும்பை மேற்கு பந்த்ராவில் இருக்கும் கரீனாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார் சைஃப் அலிகான். இந்த தம்பதிகளுக்கு தைமூர், ஜேக் என இரு ஆண் குழந்தைகள் உள்ளார்கள்.

சைஃப் அலிகான் படங்கள்

1993இல் வெளியான பரம்பாரா என்ர படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் சைஃப் அலிகான். முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடி குடும்பத்தை சேர்ந்த சைஃப் அலிகான், தில் சாத்தா ஹே, ஓம்காரா, தானாஜி போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னாள் கிரிக்கெட்டர் மன்சூர் அலிகான் பட்டோடி, பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மகன் தான்.

கடந்த ஆண்டு தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான தேவரா: பார்ட் 1 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சைஃப் அலிகான். இதையடுத்து இந்த ஆண்டில் இவரது நடிப்பில் ஜூவல் தீப்: தி ரெட் சன் சாப்டர் என்ற படம் உருவாகி வருகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.