தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்! நாக சைதன்யாவுடன் சூரிய நாரயணா கோயிலில் சாய் பல்லவி சாமி தரிசனம்

Sai Pallavi: அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்! நாக சைதன்யாவுடன் சூரிய நாரயணா கோயிலில் சாய் பல்லவி சாமி தரிசனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 20, 2024 05:30 PM IST

அலைமோதிய ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில், நடிகர் நாக சைதன்யாவுடன், ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இருக்கும் சூரிய நாரயணா கோயிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம் செய்தார்

நாக சைதன்யாவுடன் சூரிய நாரயணா கோயிலில் சாய் பல்லவி சாமி தரிசனம்
நாக சைதன்யாவுடன் சூரிய நாரயணா கோயிலில் சாய் பல்லவி சாமி தரிசனம்

தற்போது தாண்டல் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் இவர், ராமாயணா, பாலிவுட் இயக்குநர் ஜுனைத் கான் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சூரிய நாராயணர் கோயிலில் சாமி தரிசனம்

இதையடுத்து ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இருக்கும் அரசவல்லி சூரியனார் கோயிலுக்கு சென்ற சாய் பல்லவி சாமி தரிசனம் செய்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

சாய் பல்லவி கோயிலுக்கு வருவது குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் கூட்டமாக கூடி புகைப்படம் க்ளிக்க தள்ளியதோடு, விடியோக்கள் எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர். இவை அனைத்தும் வைரலாகியுள்ளன.

தற்போது சாய் பல்லவி நடித்து வரும் தாண்டல் படத்தின் படப்பிடிப்பு அரசவல்லி சூரியனார் கோயில் அருகே நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அவர் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளாராம்.

சாய் பல்லவி வந்த காரை சுற்றி சூழ்ந்தவாறு ரசிகர்கள் அவரை பார்த்து மகழ்ந்துள்ளனர். தாண்டல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் நாக சைதன்யாவும் இணைந்து சாய் பல்லவியுடன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

லைட் பச்சை நிறத்தில் சேலை அணிந்து கோயிலுக்கு வந்த சாய் பல்லவி சாமி கும்பிட்டு விட்டு சென்றுள்ளார்.

தாண்டல் படம்

கடந்த 2010இல் ஸ்ரீகாகுளம் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தாண்டல் படம் உருவாகி வருகிறது. சந்து மோன்டெடி இயக்கும் இந்த படத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாலிவுட் அறிமுகம்

தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த சாய் பல்லவி முதல் முறையாக பாலிவுட் படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணா படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்த அமீர்கான் மகன் ஜுனைத் கான் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கவுள்ளார்.

சாய் பல்லவி தமிழ் படம்

சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக சாய் பல்லவி ஜோடியாக நடித்திருக்கும் படம் அமரன். இந்திய ராணுவத்தில் இருந்த மேஜர் முகுந்த வரதராஜன் வாழ்க்கையை தழுவி பயோபிக் ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்டிருக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

கடைசியாக இவரது நடிப்பில் தமிழில் கார்கி என்ற படம் 2022இல் வெளியானது. இதன் பின்னர் 2023இல் சாய் பல்லவி நடிப்பில் எந்த படமும் திரைக்கு வரவில்லை.

இந்த ஆண்டில் தமிழில் அமரன், தெலுங்கில் தாண்டல் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அத்துடன் மேலும் இரண்டு இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்