Sai Pallavi: ‘சேலை சென்டிமென்ட்.. பாட்டிக்கும் தேசிய விருதுக்கும் சம்மந்தம் இருக்கு..’ - சாய் பல்லவி பேட்டி!
Sai Pallavi: நடிகை சாய் பல்லவி கடந்த ஆண்டு கார்கிக்கு தேசிய விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்த காரணத்திற்காகவே தனக்கு இந்த விருது வேண்டும் என்று ஒப்புக்கொண்டார். - சாய் பல்லவி பேட்டி!

Sai Pallavi: கடந்த ஆண்டு ‘கார்கி’ படத்திற்காக சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சென்றது. இதற்கு சோசியல் மீடியாவில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு நித்யா மேனன் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சாய் பல்லவி, கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு தேசிய விருது வாங்க ஆசைப்படுவதற்கான காரணத்தை பகிர்ந்திருக்கிறார்.
தேசிய விருது குறித்து சாய் பல்லவி
அவர் அளித்த பேட்டியில், "நான் எப்போதும் தேசிய விருதை வாங்க விரும்பி இருக்கிறேன். காரணம், எனக்கு 21 வயதாக இருந்தபோது, என் பாட்டி எனக்கு ஒரு சேலையைக் கொடுத்து, இதை உன் திருமணத்திற்கு கட்டிக்கொள் என்றார்.
அந்த நேரத்தில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அதனால், நான் அடுத்தது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் ‘பிரேமம்’ படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 23 - முதல் 24 வயது இருக்கும்.
இதையும் படிங்க:- Actress Shobana: 'விரதம் இருந்து செத்துட்டா.. ஆனா வடிவேலுவோட வச்சு பேசுறாங்க..' வேதனையில் ஷோபனா குடும்பம்
பாட்டி கொடுத்த சேலை
அதன் பின்னர் சரி.. நாம் என்றாவது ஒரு நாள் பெரிய விருதை வாங்குவோம். அப்போது இந்த புடவையை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்போது தேசிய விருது பெரிய விருதாக பார்க்கப்பட்டது. அதனால் தேசிய விருது நேரடியாக அந்த சேலையுடன் கனெக்ட் ஆகி விட்டது.
ஆக, நான் தேசிய விருதை எதிர்பார்த்தாலும் சரி, அதை வாங்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இருந்தாலும் சரி, அது இந்த காரணத்திற்கு மட்டும்தான். ஆனால், நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் திரையில் நடித்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் உணர்ந்தாலே போதும், மற்றவையெல்லாம் எனக்கு போனஸ்தான். காரணம், நான் விருதை விட இதை கொஞ்சம் அதிகமாக மதிக்கிறேன்.’ என்று பேசினார்.
தேசிய விருது சர்ச்சைக்கு நித்யா மேனன் கொடுத்த பதிலடி
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரம் விருது பெறும் கதாபாத்திரம் அல்ல என்று சுட்டிக்காட்டி சிலர் விமர்சிப்பது குறித்து, நித்யா கூறுகையில், "எனக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்த படம் திருச்சிற்றம்பலம் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். விஷயம் என்னவென்றால், நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகும்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும் படங்களைச் செய்ய விரும்புகிறேன். அதைப் பார்க்கும்போது மற்றவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன்.
ஒரு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சிப்பதை விட, மிகவும் சுயநலமான வழியில் மற்றொரு நபரை புன்னகைக்க அல்லது மகிழ்ச்சியாக வைப்பதில் தான் நடிப்பதை நான் மிகுந்த அளவில் நம்புகிறேன்.
இது ஒரு தொடர்ச்சியான விவாதம். அது ஒருபோதும் அழியாது' என்று பேசிய அவர், 'ஏன் ஒரு நகைச்சுவையான படத்தைப் பார்த்து விருது வழங்கக்கூடாது' என்று நித்யா மேனன் கேள்வி எழுப்பினார்.
மேலும், "உதாரணத்துக்கு ஒரு காமெடி படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகைத் திரைப்படங்களில் எழுதுவதோ, நடிப்பதோ எளிதல்ல. ஆனால் அது நாடகத்தனமாக இல்லை என்பதற்காக விருதுகளுக்காக ஏன் புறக்கணிக்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலம், ஷோபனா ஆகியோருக்கு கிடைத்த இந்த வெற்றி, விருதுகள் நாடகத்தனமான பாத்திரங்களுக்காக மட்டும் வழங்கப்படுவதில்லை என்பதை நிரூபிக்கிறது. ஒரு விருதை வெல்ல நீங்கள் செயற்கையாக இருக்க வேண்டியதில்லை. சில வகையான நாடக பாத்திரங்களில் நடிப்பதில் ஒருவித வெறி இருக்கிறது’’ என்று நடிகை நித்யா மேனன் பேட்டியளித்திருக்கிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்