Sai pallavi: ‘விஜய் சாரோட டான்ஸ்ல அப்படி ஒரு கிரேஸ் இருக்கும்’.. அவரும் சிம்ரன் மேமும் ஆடும் போது’ - சாய் பல்லவி பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: ‘விஜய் சாரோட டான்ஸ்ல அப்படி ஒரு கிரேஸ் இருக்கும்’.. அவரும் சிம்ரன் மேமும் ஆடும் போது’ - சாய் பல்லவி பேட்டி

Sai pallavi: ‘விஜய் சாரோட டான்ஸ்ல அப்படி ஒரு கிரேஸ் இருக்கும்’.. அவரும் சிம்ரன் மேமும் ஆடும் போது’ - சாய் பல்லவி பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 07, 2025 07:38 AM IST

'நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்' - சாய் பல்லவி

Sai pallavi: ‘விஜய் சாரோட டான்ஸ்ல அப்படி ஒரு கிரேஸ் இருக்கும்’.. அவரும் சிம்ரன் மேமும் ஆடும் போது’ - சாய் பல்லவி பேட்டி
Sai pallavi: ‘விஜய் சாரோட டான்ஸ்ல அப்படி ஒரு கிரேஸ் இருக்கும்’.. அவரும் சிம்ரன் மேமும் ஆடும் போது’ - சாய் பல்லவி பேட்டி

சாய் பல்லவி
சாய் பல்லவி

உண்மை சம்பவங்களை தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு வழங்குகிறார்.

உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தத்திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து கதையின் நாயகியும், சாய் பல்லவியும் பகிர்ந்து கொண்டது இங்கே!

ஏன் ஒப்புக்கொண்டேன்?

இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்ன? எனக் கேட்டால்...இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது. இந்தக்கதையின் மூல வடிவத்தை கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் என்ன சம்பவம் நடந்தது? என்ற விவரம் இடம் பிடித்திருந்தது.

சாய் பல்லவி
சாய் பல்லவி

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் தங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை அவர்களுடைய மனைவிமார்கள் எப்படி எந்தவித தொடர்பும் இல்லாமல் மீட்டு வந்தார்கள் என்ற விஷயம் அதில் இருந்தது. அதை படித்தவுடன் இதனை எப்போது செய்தாலும்.. இந்த உணர்வு ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன்.

ஒவ்வொரு படத்திலும் உங்களின் நடிப்பு சிறப்பாக இருக்கிறதே. இதற்கான காரணம் என்ன? என கேட்டால்..

அதற்கு காரணம்.. அந்தக் கதை.. அந்த கதாபாத்திரம்.. அதன் இயக்குநர்.. இந்த மூன்றும் தான் முக்கிய காரணம்.

சாய் பல்லவியின் நடிப்பை போல் நடனமும் பிரபலம். இந்த திரைப்படத்தில் எப்படி..?

நடனத்தை பொறுத்தவரை நான் நன்றாக ரசித்து ஆடுவேன். விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும். அதை பார்க்கும் போது நாமும் ஆட வேண்டும் என்று தோன்றும். விஜய் சார், சிம்ரன் மேடம் நடனமாடும் போது அதை பார்த்து உற்சாகம் அடைந்திருக்கிறேன். நடன அசைவுகளை துல்லியமாக ஆட வேண்டும் என்பதை விட அதை அனுபவித்து ஆட வேண்டும் என எண்ணுவேன்.

இந்தப் படத்தில் பல நூறு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் போது, அது சவாலானதாக இருந்தது. குறிப்பாக ‘ நமோ நமச்சிவாயா’ பாடலுக்கு நடனமாடும் போது, என் சக கலைஞரான நாக சைதன்யா உடன் இணைந்து நிறைய ஒத்திகை பார்த்தோம். அந்தப் பாடலில் என்னை விட நாக சைதன்யா நன்றாகவே நடனமாடி இருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை

திரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்கிறீர்களே.. இதன் ரகசியம் என்ன? எனக் கேட்டால்...என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும், அதில் பங்களிப்பு செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.

'தண்டேல்' திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கிறது. சண்டை காட்சிகள் இருக்கிறது. நடனமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உணர்வுபூர்வமான காதலும் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’ என்று அதில் அவர் பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.