தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sai Pallavi Glows In Simple Yellow Saree At Sister Pooja Kannan Engagement; Check Out The Dreamy Pics

Sai Pallavi: கெட்டி மேளம் கொட்டுங்கடா… ‘இதயத்தால தாங்கவே முடியல’.. - சாய் பல்லவி தங்கை எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2024 08:43 AM IST

இவருக்கு தற்போது வினீத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான போட்டோக்களை பூஜா கண்ணன் வெளியிட்டு இருக்கிறார்.

பூஜா கண்ணன்!
பூஜா கண்ணன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய தங்கை பூஜா கண்ணன். காரா என்ற குறும்படத்தில் நடித்த இவர் ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவருக்கு தற்போது வினீத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான போட்டோக்களை பூஜா கண்ணன் வெளியிட்டு இருக்கிறார்.

 

அந்த பதிவில், “ பெரிய குடும்பம்.. நிறைவான இதயங்கள்.. என் இதயம் தாங்க முடியாத அளவு அன்பு” என்று பதிவிட்டு இருக்கிறார். அவை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அது குறித்தான பதிவில், “ தன்னமிலன்றி நேசிப்பது, பொறுமையாக இருப்பது, அன்பில் நிலைத்த தன்மையோடு அழகாக இருப்பது உள்ளிட்டவற்றை இந்த பொத்தான் தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. இவர்தான் வினீத். என்னுடைய ஒளி. இவ்வளவு நாள் கிரைம் பார்ட்னராக இருந்தவர் லைஃப் பார்ட்னராக மாறியிருக்கிறார்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவவீரராக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் லல்லுவும், ராகுல் போஸூம் நடிக்கின்றனர். அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில், “ வாவ்... இப்போதுதான் எஸ் கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்தேன். முழுக்க முழுக்க அதகளமாக இருக்கிறது. உணர்ச்சிபூர்வமான இந்த கதையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் ராஜ்குமார் பெரியசாமி. மொத்த குழுவுக்கும் என்னுடைய பெரிய பாராட்டுகள்” என்று பதிவிட்டு இருந்தார்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.