Sai Pallavi: ‘நீங்க பாசாங்கு இல்லாதவர் சந்தீப்..’ -சர்ச்சை இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி - வலுக்கும் எதிர்ப்பு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: ‘நீங்க பாசாங்கு இல்லாதவர் சந்தீப்..’ -சர்ச்சை இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி - வலுக்கும் எதிர்ப்பு!

Sai Pallavi: ‘நீங்க பாசாங்கு இல்லாதவர் சந்தீப்..’ -சர்ச்சை இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி - வலுக்கும் எதிர்ப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2025 08:34 AM IST

Sai Pallavi: ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர்களுக்கே உரித்தான குரல் இருக்கும். ஆனால், உங்களுடைய குரல் திரையிலும், நீங்கள் கொடுக்கும் நேர்காணல்களிலும், எங்கு சென்றாலும் பாசாங்கு இல்லாததாக இருக்கிறது. - சாய் பல்லவி

Sai Pallavi: ‘நீங்க பாசாங்கு இல்லாதவர் சந்தீப்..’ -சர்ச்சை இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி - வலுக்கும் எதிர்ப்பு!
Sai Pallavi: ‘நீங்க பாசாங்கு இல்லாதவர் சந்தீப்..’ -சர்ச்சை இயக்குநரை பாராட்டிய சாய்பல்லவி - வலுக்கும் எதிர்ப்பு!

சாய் பல்லவி என்ன சொன்னார்?

சந்தீப் ரெட்டி வங்காவைப் புகழ்ந்து பேசிய சாய் பல்லவி, ‘ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர்களுக்கே உரித்தான குரல் இருக்கும். ஆனால், உங்களுடைய குரல் திரையிலும், நீங்கள் கொடுக்கும் நேர்காணல்களிலும், எங்கு சென்றாலும் பாசாங்கு இல்லாததாக இருக்கிறது. நீங்கள் பாசாங்கு இல்லாதவராக இருக்கிறீர்கள். ஒருவர் அவரைச் சுற்றி இருக்கும் விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது பார்ப்பதற்கு நன்றாகவும், புத்துணர்வாகவும் இருக்கிறது.

சில நேரங்களில், மக்களைப் போற்றுவதற்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் மனிதர்களாக, நாம் மன்னிப்புக்கேட்க முன்வராத போது, அதுவே ஒரு வெளிப்பாடாக மாறும். அந்த விஷயங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.' என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “உங்கள் ஆர்வம் சரியான இடத்தில் இருக்கும்போது.. அதாவது, நீங்கள் எப்படி  ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை எடுத்து, வட இந்தியாவிற்கு சென்று படம் இயக்கி, தற்போது இன்னும் பெரிய படங்களை இயக்க கமிட் ஆகிருப்பது வரை உள்ளிட்ட நிகழ்வுகளை குறிப்பிடுகிறேன். மக்கள் உங்கள் படங்களை எதிர்நோக்குகிறார்கள். அதுதான் மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.” என்றார்.

இதை கடுமையாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள், முன்னதாக அனன்யா பாண்டே,  ‘அர்ஜூன் ரெட்டி’ போன்ற திரைப்படங்களில் நடிகர்கள் வெளிப்படுத்தி நன்றாக இருந்தாலும், அது போன்ற படைப்புகள் எனக்கு உகந்தது இல்லை என்று பேசியதை மேற்கோள் காட்டி வருகின்றனர். 

 

முன்னதாக, சந்தீப் ரெட்டி வங்கா ‘கபீர் சிங்’ மற்றும் ‘அனிமல்’ போன்ற தனது படங்களில் பெண்களை அணுகும் விதத்திற்காக பலத்த எதிர்ப்பை சந்தித்தார். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றன. இந்தியில் அர்ஜூன் ரெட்டி ரீமேக்காக உருவான ‘கபீர் சிங்’ உலகளவில் 377 கோடி வசூலித்தது. ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ உலகளவில் 900 கோடியைத் தாண்டியது.

சந்தீப் ரெட்டி பேசியது

சந்தீப் ரெட்டி வங்கா பேசும் போது ‘ ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் முதலில் நான் சாய்பல்லவியை நடிக்க வைக்கலாம் என்று எண்ணி, கேரளாவில் இருந்த ஒருகிணைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு, சாய் பல்லவியை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும். இது ரொமாண்டிக்கான படம் என்றேன்.

உடனே அவர் ரொமண்டிக்கான திரைப்படமா? ரொமண்டிக் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டார். உடனே நான், தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே காட்டப்பட்ட ரொமண்டிக்கான காட்சிகளை விட, இதில் அதிகமாக ரொமண்டிக் காட்சிகள் இருக்கும் என்றேன். உடனே அவர், சாய்பல்லவியை நடிக்க வைப்பதை மறந்து விடுங்கள்.

அந்தப்பெண் ஸ்லீவ்லெஸ் ஆடையை கூட அணியமாட்டார் என்று சொன்னார். பின்னாளில் அவர் உங்களின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்’ என்று பேசினார். இதைக்கேட்ட சாய்பல்லவி சிரித்தார்.

சாய் பல்லவி மாறவே இல்லை

அதனை தொடர்ந்து பேசிய சந்தீப், காலப்போக்கில், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் கதாநாயகிகள் மாறி விடுவார்கள். ஆனால், சாய் பல்லவி சிறிதும் கூட மாறாமல் இருப்பது பெரிய விஷயம். இது உண்மையில் மிகவும் சிறந்தது.’ என்று பேசினார்.

‘தண்டேல்’ பற்றி

நடிகர் அக்கினேனி நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த படம் தண்டேல். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான இந்தப் படத்தை சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் அல்லு அரிவிந்த் தயாரிப்பில், கீதா ஆர்ட்ஸ் பேனரில், உணர்வுப்பூர்வமான தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரித்துள்ளார். தண்டேல் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.