Sai Pallavi: தண்டேல் பட வெற்றி.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா!
Sai Pallavi: தண்டேல் பட வெற்றிக்குப் பின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் படக்குழுவினரால் அப்பகுதியில் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

Sai Pallavi: நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தண்டேல் படம் வெற்றி அடைந்த நிலையில், திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.
அவர்களுடன் தண்டேல் பட இயக்குநர் சந்து மொண்டெட்டி மற்றும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோரும் உடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தண்டேல் பட ரிலீஸான முதல் நாளே, நாக சைதன்யாவின் படங்களிலேயே அதிகமான பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கொண்டிருந்தது.
தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களைப் பார்க்கும் நம்பிக்கையில் ஒரு பெரிய கூட்டம் திருமலை திருப்பதியில் கூடியது. இந்த சுவாமி தரிசனத்தின்போது, நாகசைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு, தங்கள் தோள்களில் மரியாதைக்குரிய சிவப்பு வஸ்திரங்களைப் போர்த்தியபடி ஊடகங்களின் படங்களுக்கு போஸ் கொடுப்பதைக் காண முடிந்தது.
முன்னதாக, நாக சைதன்யா சாய் பல்லவியுடன் பணிபுரிந்த தனது அனுபவத்தை ஏ.என்.ஐ ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார். மேலும் திரையில் அவரது ஆற்றலை வெகுவாகப் பாராட்டினார்.
சாய்பல்லவி குறித்து பேசிய நாக சைதன்யா
அப்போது பேசிய சாய்பல்லவி குறித்து பேசிய நாக சைதன்யா,"இது ஒரு சிறந்த அனுபவம். சாய் பல்லவியுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில், அவர் திரையில் அவரது காட்சிகளில் அவ்வளவு ஆற்றலைக் கொண்டு வருகிறார். அவர் தனது நடிப்பை பல வழிகளில் முழுவதுமாக கடத்துகிறார். எனவே இருவரும் தண்டேல் படத்தில் நடிக்கும் போது மீண்டும் இணைந்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது" என்று ஏ.ன்.ஐயிடம் கூறினார்.
இந்த கதாபாத்திரத்திற்காக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொண்டார் என்பதையும் நாக சைதன்யா வெளிப்படையாகப் பேசினார்.
அப்போது," படத்திற்கான தயாரிப்பு என்பது உடல் மற்றும் மன அம்சங்களை உள்ளடக்கியது. தண்டேல் படத்தைப் பொறுத்தவரை, மீனவர்களின் தலைமுடி, தாடி மற்றும் பழுப்பு நிறத்தோல் ஆகிய உடல் மாற்றம் ஏற்பட வேண்டும். இது தவிர, ஸ்ரீகாகுளம் பகுதியின் வட்டார வழக்கு பேசி மற்றும் அப்பகுதியினரின் உடல் மொழியில் நான் நடிக்க வேண்டியிருந்தது.
சாய் பல்லவியுடன் ஒரு நடனக் காட்சி இருந்தது. எனவே, அதற்காக நிறைய ஒத்திகைகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் தேவைப்பட்டன", என்று நடிகர் நாகசைதன்யா கூறினார்.
மேலும் படிக்க: தண்டேல் படத்தின் நான்காம் நாள் வசூல்
மேலும் படிக்க: தண்டேல் படத்தின் கதை என்ன?
மேலும் படிக்க: தண்டேல் படத்தின் ரிவியூ
தண்டேல் ஸ்ரீகாகுளம் மீனவர்களின் நிஜக்கதை:
தண்டேல் படத்தில் ஸ்ரீகாகுளம் மீனவர் ராஜு கதாபாத்திரத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்தது ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறது. சத்யா என்கிற புஜ்ஜித்தல்லி என்கிற கதாபாத்திரத்தில் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தவர், நடிகை சாய் பல்லவி. இப்படத்தை சந்து மொண்டெட்டி இயக்கியுள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் பல மாதங்களைக் கழித்துவிட்டு இந்தியா திரும்பிய ஸ்ரீகாகுளம் மீனவர்களின் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. படத்தின் முதல் அரை மணி நேர காட்சி சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தாலும், அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பன்னி வாசு இதனைத் தயாரித்து இருந்தார். அல்லு அரவிந்த் இப்படத்தினை ரிலீஸ் செய்தார். ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவான தண்டேல் படம் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையை செய்திகள்