என்ன பேபி சொல்லிடலாமா? - திருமண தேதியை அறிவித்த சாய் தன்ஷிகா! - வெட்கத்தில் பூரித்த விஷால்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்ன பேபி சொல்லிடலாமா? - திருமண தேதியை அறிவித்த சாய் தன்ஷிகா! - வெட்கத்தில் பூரித்த விஷால்!

என்ன பேபி சொல்லிடலாமா? - திருமண தேதியை அறிவித்த சாய் தன்ஷிகா! - வெட்கத்தில் பூரித்த விஷால்!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 19, 2025 10:09 PM IST

இந்த மேடையை நாங்கள் திருமண அறிவிப்புக்கான மேடையாக நிச்சயமாக நினைக்கவில்லை. இன்று காலையில் தனியார் சேனல் என்று எங்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்தி வெளியிட்டது. - சாய் தன்ஷிகா பேச்சு!

என்ன பேபி சொல்லிடலாமா? - திருமண தேதியை அறிவித்த சாய் தன்ஷிகா! - வெட்கத்தில் பூரித்த விஷால்!
என்ன பேபி சொல்லிடலாமா? - திருமண தேதியை அறிவித்த சாய் தன்ஷிகா! - வெட்கத்தில் பூரித்த விஷால்!

சாய் தன்ஷிகா பேசும் போது, ‘இந்த மேடையில் நான் உட்கார்ந்து இருக்கும் போது தான் நான் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது. கிட்டத்தட்ட இது ஒரு குடும்ப சந்திப்பு போல இருக்கிறது. இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமான மேடை. நான் பேச முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.

கடவுளுக்கு மிகவும் நன்றி

கடவுளுக்கு மிகவும் நன்றி; இந்த நாளை அவர் ஏற்படுத்தி கொடுத்ததற்காக. இந்த இடத்தில் தவறி போன என்னுடைய மாமாவை நினைத்துக் கொள்கிறேன். இந்தத் திரைத்துறையில் எனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடி இருக்கிறேன். இந்த இடத்திற்காக கடுமையாக வியர்வை சிந்திக்கி இருக்கிறேன். நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.

இந்த மேடையை நாங்கள் திருமண அறிவிப்புக்கான மேடையாக நிச்சயமாக நினைக்கவில்லை. இன்று காலையில் தனியார் சேனல் என்று எங்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்தி வெளியிட்டது. காலையிலேயே நான் அவரிடம்.. நான் உங்களது நண்பர் நீங்கள் என்ன என்னுடைய நண்பர்.. 15 வருட நண்பர். அப்படியே சொல்லிக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன்.

என்ன பேபி சொல்லி விடலாமா..

அதற்கு மேலே நாங்கள் எல்லாம் நண்பர்களாக உறவினர்களாக பத்திரிகையாளர்கள் உங்களோடு கடந்து வந்திருக்கிறோம். இதற்கு மேல் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.. என்ன பேபி சொல்லி விடலாமா.. நாங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறோம்.

எனக்கு கிட்டத்தட்ட 15 வருடங்களாக விஷாலை தெரியும். என்னை எங்கு பார்த்தாலும் அவர் மிகவும் மரியாதையோடு நடத்துவார். எனக்கு ஒரு விஷயம் நடக்கும் பொழுது, எப்போதுமே குரல் கொடுத்திருக்கிறார். எந்த நடிகரும் வீட்டிற்கெல்லாம் வந்ததில்லை. ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னவுடன் அவர் நேரில் வந்தார். சமீபமாகத்தான் திருமணம் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தோம்; எனக்கும் தோன்றியது; அவருக்கும் தோன்றியது. அப்போதுதான் இது கல்யாணத்தில் முடிய போகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்’ என்று பேசினார்.