அக்கா கூப்பிடாதீங்க சாச்சனா! கடுப்பில் கத்திய சுனிதா! தொனியை மாற்றிய சாச்சனா!
தமிழ் பிக் பாஸ் 8 ஆவது சீசன் மூன்று வாரங்களைக் கடந்து நான்காவது வாரமான இன்று தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நான்காவது வாரத்திற்காக நாமினேட் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

தமிழ் பிக் பாஸ் 8 ஆவது சீசன் மூன்று வாரங்களைக் கடந்து நான்காவது வாரமான இன்று தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை நான்காவது வாரத்திற்காக நாமினேட் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை பிக் பாஸ் அறிவித்திருந்தார். இந்த வாரமும் நாமினேஷன் லிஸ்ட்டில் ஆண்கள் அணி பெண்கள் அணியினையும், பெண்கள் அணி ஆண்கள் அணியினையும் நாமினேட் செய்திருந்தனர். இந்நிலையில் நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், ரஞ்சித், சத்யா உட்பட பலர் இருந்தனர். இந்த பட்டியலில் இருக்கும் யாரோ ஒருவர் அடுத்த வாரம் வெளியாக உள்ளார். அது யார் எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 8 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதுவித பிரச்சனையோடு போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். அடிக்கடி சண்டை வாக்குவாதம் எனவும் அவை முற்றி பெரும் பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலும் போட்டியாளர்கள் திணறி வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் வெளியான பேட்மேன் மற்றும் அர்ணவ் வெளியே சென்றவுடன் போட்டியாளர்களின் மீதான தங்களது கோபத்தையும் வன்மத்தையும் வீடியோவாக வெளியிட்டு வந்தனர். மூன்றாவது வாரமான நேற்று எலிமினேட் செய்யப்பட்ட தர்சாவும் போட்டியிலிருந்து விலகி வெளியே வந்த பின்னர் போட்டியாளரிடம் மிகுந்த வர்மத்தோடு பேசி உள்ளார். இதனை கண்டித்த விஜய் சேதுபதி அவரது பேச்சை தடுத்து நிறுத்தினார்.
தொனியை மாற்றிய சாச்சனா
பிக் பாஸ் சீசன் 8 தொடங்கிய போது 18 போட்டியாளர்களைக் கொண்ட ஆரம்பித்தது. இந்நிலையில் புதுவிதமாக இருக்க வேண்டும் என்பதனால் முதல் 24 மணி நேரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவரே சாச்சனா, முதல் நாளிலேயே வெளியேற்றப்பட்டதை எடுத்து மிகுந்த வருத்தத்தில் சென்றிருந்தார். பின்னர் ஒரு வாரத்திற்கு பின் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தார். இதனை அடுத்து கடந்த இரண்டு வாரங்களாக நாமினேட் செய்யப்பட்டும், செய்யப்படாமலும் மக்களின் வாக்குகளை பெற்று வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருப்பது உறுதி என்பது தெரிந்தவுடன் சாச்சனாவின் தொனி முற்றிலும் மாறிவிட்டதாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கூடுதலாக முதலில் நிகழ்ச்சி ஆரம்பித்தபோது விஜய் சேதுபதியை அப்பா என்று அழைத்ததும், பின்னர் சார் என்று அழைக்கவும் தொடங்கினார். இந்த மாற்றமே பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பெண்கள் அணியினருடன் சாட்சனா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் . அதற்கு நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சேர்ந்து மற்றவர்களை விளக்கி வைத்திருப்பதாகவும், அவர்களுடன் பேசாமல் இருப்பதாகவும் கூறுகிறார். எங்களைப் பற்றி பேசும்போது நானும் பேசுவேன் என சுனிதா வந்து பேச ஆரம்பிக்கும் போது நீங்கள் பாதியில் வந்து எதுவும் பேசாதீர்கள் என்ற சாட்சனா கூறுகிறார். அதனால் ஆத்திரமடைந்த சுனிதா என்னை அக்கா என்று கூப்பிடாதீர்கள். சுனிதா எனவும் அக்கா எனவும் மாற்றி மாற்றி குறிப்பிடுவதால் என் மனசு கஷ்டமாக இருக்கிறது எனக் கூறினார்।

டாபிக்ஸ்