Thalapathy Vijay: “3 1/2 வயது பிஞ்சு.. வித்யா இறந்ததினால்தான் அவன டாக்டராக்க.. ஆனா அவன்” - விஜய் வித்யா உறவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: “3 1/2 வயது பிஞ்சு.. வித்யா இறந்ததினால்தான் அவன டாக்டராக்க.. ஆனா அவன்” - விஜய் வித்யா உறவு!

Thalapathy Vijay: “3 1/2 வயது பிஞ்சு.. வித்யா இறந்ததினால்தான் அவன டாக்டராக்க.. ஆனா அவன்” - விஜய் வித்யா உறவு!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 19, 2024 07:04 PM IST

Thalapathy vijay: அவருக்கும் அவரது தங்கைக்குமான உறவு அப்படி இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் விஜய், அழுக்குத்துணி வைக்கும் கூடையில் வித்யாவை தூக்கி வைத்து விளையாடுவார் - விஜய் வித்யா உறவு!

Thalapathy Vijay: “3 1/2 வயது பிஞ்சு.. வித்யா இறந்ததினால்தான் அவன டாக்டராக்க.. ஆனா அவன்”  - விஜய் வித்யா உறவு!
Thalapathy Vijay: “3 1/2 வயது பிஞ்சு.. வித்யா இறந்ததினால்தான் அவன டாக்டராக்க.. ஆனா அவன்” - விஜய் வித்யா உறவு!

அதிர்ஷ்ட குழந்தை

இது குறித்து அவர் பேசும் போது, “நான் அப்போது அசிஸ்டண்ட் டைரக்டர், ஷோபா மேடைப் பாடகி. எங்களுடைய வாழ்க்கை அன்று அப்படித்தான் இருந்தது. எக்மோர் அரசு மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார். அவர் பிறக்கும் போது, அவர் இவ்வளவு அதிஷ்டமான குழந்தையாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கும் அவரது தங்கைக்குமான உறவு அப்படி இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் விஜய், அழுக்குத்துணி வைக்கும் கூடையில் வித்யாவை தூக்கி வைத்து விளையாடுவார். நாங்கள் கீழே விழுந்து விடுவாள் என்று பதறுவோம். ஒரு முறை கீழே கூட விழுந்தது என்று நினைக்கிறேன்.

அப்போது கூட அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. விஜய் போன்ற குழந்தையை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி. விஜயை நினைத்து, நினைத்து தினம் தினம் பெருமை படுகிறோம். 1991ம் ஆண்டு, அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நான் வேறு விதமாக நினைத்திருந்தேன். ஆம் , நான் விஜயை ஒரு டாக்டராக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். காரணம் என்னவென்றால், விஜயின் தங்கை வித்யா லுகேமியாவால் இறந்தாள். 

டாக்டராக்க ஆசைப்பட்டேன் 

ஆகையால் அதில், விஜயை சிறப்பு வாய்ந்த டாக்டராக மாற்றி, பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்று நினைத்தேன். காரணம், வித்யா எங்களை விட்டுச் சென்ற போது அவளுக்கு வெறும் 3 1/2 வயது. அந்த மாதிரியான இழப்பு யாருக்கும் வந்து விடக்கூடாது என்றுதான் அப்படி நினைத்தேன். ஆனால் விஜய் நான் நடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக நின்றார். ஒரு முறை முடிவெடுத்துவிட்டால், தன்னுடைய பேச்சை தானே கேட்கமாட்டேன் என்று அவர் கூறுவது, அன்றே அவருக்கு இருந்த பிடிவாத குணமாகும்.” என்று பேசினார்.

முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.