Premji Marriage: ‘பகைன்னா பகைதான்.. கோரமுகம் காட்டிய இசைஞானி.. பிரேம்ஜி கல்யாணத்திற்கு இளையராஜா வராதது ஏன்?
Premji Marriage: இளையராஜாவைப் பொறுத்தவரை, சாதாரண சண்டையின் போதே கிட்டதட்ட ஒரு மண்டலம் பேசாமல் இருப்பார். அப்படி இருக்கும் பொழுது, இப்படிப்பட்ட ஒரு பெரிய பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கும் பொழுது இளையராஜா பேசுவாரா என்ன? - பிரேம்ஜி கல்யாணத்திற்கு இளையராஜா வராதது ஏன்?
Premji Marriage: கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபு தம்பியுமான பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன் கோயிலில் வைத்து கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களின் நெருங்கிய உறவினரான இளையராஜா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர் ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்பது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் சினிமா சேனலுக்கு பேசியிருக்கிறார்.
இளையராஜா ஏன் வரவில்லை
இது குறித்து அவர் பேசும் பொழுது, “இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் இடையே கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பாகவே பிரச்சினை மூண்டது. அது வேறு ஒன்றும் இல்லை. எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைதான். ஒரு கட்டத்தில் இளையராஜா தன்னுடைய இசையில் வெளியான பாடல்களை பொது வெளியில் பாடும் பொழுது, அதற்கான ராயல்டி தொகையை தனக்கு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா முறையிட்டார்.
நக்கீரனில் தொடர் ஒன்றை எழுதும் பொழுது, கங்கை அமரன் இளையராஜாவும், தானும் எந்தெந்த பாடல்களில் இருந்து மெட்டுக்களை திருடினோம் என்பது குறித்து ஒரு பட்டியலே போட்டு பேசியிருந்தார். அதே போல, ராயல்டி தொடர்பான பிரச்சனையின் போது, நாமே பல பிரபல இசையமைப்பாளர்களிடமிருந்து மெட்டுக்களை திருடி இருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது நீ இப்படியான ஒரு ராயல்டி தொகையை கேட்பது எந்த விதத்தில் நியாயம். இப்படி பணத்தை சேர்த்து என்ன செய்யப் போகிறாய் என்று கொந்தளித்து பேசி இருந்தார். இவை இளையராஜாவிற்கு கடுமையான கோபத்தை உண்டாக்கியது.
ஒரு மண்டலம் பேசாமல் இருப்பார்.
இளையராஜாவைப் பொறுத்தவரை, சாதாரண சண்டையின் போதே கிட்டதட்ட ஒரு மண்டலம் பேசாமல் இருப்பார். அப்படி இருக்கும் பொழுது, இப்படிப்பட்ட ஒரு பெரிய பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கும் பொழுது இளையராஜா பேசுவாரா என்ன? இது தவிர அவரது மகள் பவதாரணி வேறு அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். அப்போது கங்கை அமரன் வீட்டில் இருந்து கொண்டே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தவிரவும் அவர்களுக்குளாக முட்டல் மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.” என்று பேசினார்.
பிரேம்ஜி பற்றி:
பிரபல இயக்குநரும், இசைக்கலைஞருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. இசையமைப்பதில் முதன்மையான ஆர்வம் கொண்ட இவர், திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவரது உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம், உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பின்னணிப் பாடகராக மாறினார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பெரும்பான்மையான ராப் பாடல்களில் பிரேம்ஜி பாடி இருக்கிறார். அதே போல அவர் இசையமைப்பில் சிலவற்றை ஒலிப்பதிவு ஆல்பங்களுக்காக ரீமிக்ஸூம் செய்து இருக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்