‘மகாநதி செய்த மாயம்.. கமல் கொடுத்த காஸ்ட்லி முத்தம்.. மறுத்து இடம் கொடுத்த சுகன்யா…’ - காரணம் உடைத்த பிரபலம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘மகாநதி செய்த மாயம்.. கமல் கொடுத்த காஸ்ட்லி முத்தம்.. மறுத்து இடம் கொடுத்த சுகன்யா…’ - காரணம் உடைத்த பிரபலம்!

‘மகாநதி செய்த மாயம்.. கமல் கொடுத்த காஸ்ட்லி முத்தம்.. மறுத்து இடம் கொடுத்த சுகன்யா…’ - காரணம் உடைத்த பிரபலம்!

HT Tamil Desk HT Tamil
Jan 05, 2025 10:22 AM IST

‘சுகன்யா முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்; கமலின் முத்தம் காஸ்ட்லியானது அல்லவா..’ - காரணம் உடைத்த பிரபலம்!

 ‘மகாநதி செய்த மாயம்.. கமல் கொடுத்த காஸ்ட்லி முத்தம்.. மறுத்து இடம் கொடுத்த சுகன்யா…’ - காரணம் உடைத்த பிரபலம்!
‘மகாநதி செய்த மாயம்.. கமல் கொடுத்த காஸ்ட்லி முத்தம்.. மறுத்து இடம் கொடுத்த சுகன்யா…’ - காரணம் உடைத்த பிரபலம்!

முதலில் மறுப்புத் தெரிவித்த சுகன்யா

அவர் பேசும் போது, ‘கமல்ஹாசன் எந்த ஒரு நடிகையுடன் நடித்தாலும் அந்தப்படத்தில் முத்தக்காட்சி கண்டிப்பாக இருக்கும்; சில நடிகைகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள்.

சில நடிகைகள் ஓகே என்பார்கள். மகாநதி திரைப்படத்தில் சுகன்யாவை கமிட் செய்யும் பொழுது, எல்லோரும் அவரிடம், கமல் படம் என்றால் முத்தக்காட்சி இருக்குமே என்று கூற... நீங்கள் ஓகே சொல்லிவிட்டேர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கமலுடன் நடிக்கப் போவது உறுதிதான்.

ஆனால் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் படத்தில் அவர் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்; கமலின் முத்தம் காஸ்ட்லியானது அல்லவா.. கமல்ஹாசன் சிறையில் இருந்து வெளியே வரும்பொழுது அந்த காட்சி இடம் பெற்று இருக்கும்’ என்று பேசினார்.

1991 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் பொன்வண்ணன், நெப்போலியன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா. அதன் பின்னர் ‘எம்.ஜி.ஆர் நகரில்’ விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சின்ன கவுண்டர்’, ‘வால்டர் வெற்றி வேல்’, ‘சின்ன ஜமீன்’, ‘கேப்டன்’ கமல் நடிப்பில் வெளியான ‘மகாநதி’, ‘ இந்தியன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்தியன் படத்தில் சுகன்யா சந்தித்த பிரச்சினை

முன்னதாக, பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த இவர்‘இந்தியன்’ படத்தில் படக்குழுவுக்கும் தனக்கும் நடந்த சலசலப்பு பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இது குறித்து நடிகை சுகன்யா பேசும் போது, “ இந்தியன் படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகிய போது, அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி என்னிடம் சொல்லப்பட்டது. அந்தக்காட்சியை அவர்கள் எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. உடனே நான் அது குறித்து கேட்டேன்; அதற்கு அவர்கள் மரத்திற்கு பின்னால் வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும் வரும், அப்படித்தான் காட்சியை எடுக்கப்போவதாக சொன்னார்கள்;

ஆனால், படப்பிடிப்பில் அதை வேறுவிதமாக படமாக்கினார்கள். உடனே அது குறித்து நான் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தேன்; அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்தார்.

அவரிடம் “ கதை சொன்ன போது இரண்டு முறை அந்தக்காட்சியை எப்படி படமாக்கப்போகிறீர்கள் என்பதை கேட்டேன்; மேக்கப் போடும் போதும் கேட்டேன். அப்போதெல்லாம் ஒரு விதமாக சொல்லி விட்டு, ஷூட்டிங் செய்யும் போது காட்சியை வேறுவிதமாக எடுத்து விட்டார்கள்” என்பதை அவரிடம் விவரித்தேன்.

அதற்கு முன்னதாக டெல்லி சென்சார் போர்டிலும் இது குறித்து புகார் அளித்து இருந்தேன். ராதாரவி உடனே அது குறித்தான நடவடிக்கையை எடுத்தார்; மேலும் அந்த சமயத்தில் பல நடிகர்கள் எனக்கு ஆதரவு தருவதாக போன் செய்து சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் ராதாரவிக்கும் போன் செய்து நடந்த விஷயம் குறித்து கேட்டறிந்து அழுத்தம் கொடுத்தார்கள். இதனையடுத்து ராதாரவி இந்தியன் பட தயாரிப்பாளரிடம் சென்று எடுக்கப்பட்ட காட்சி படத்தில் வராது என்று எழுத்துப்பூர்வமாக கடிதமாக வாங்கி வந்தார். இறுதியில் அந்தக்காட்சி நீக்கப்பட்டது.” என்று அந்த பேட்டியில் அவர் பேசினார்.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.