Bhagyaraj: தமிழால் வளர்ந்த காதல்.. எம்.ஜி.ஆர் நடத்தி வைத்த கல்யாணம்.. பாக்யராஜின் முதல் மனைவி பற்றி தெரியுமா?
Bhagyaraj: பாரதிராஜாவுடன் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாக்யராஜ் அங்கு வேலை பார்த்துக் கொண்டே இவரிடமும் டச்சில் இருந்தார். அதன் பின்னர் ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தில் இயக்குநராக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார்.

Bhagyaraj: பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் முதல் மனைவி பிரவீனா குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
பிரவீனாவுடன் காதல்
இது குறித்து அவர் பேசும் போது, ‘நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது. அந்த சமயத்தில் பாக்யராஜ் அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பழக்கத்தின் வாயிலாக இருவருக்கும் காதல் பூத்தது. பிரவீனா கதாநாயகியாக இருந்த காரணத்தால், பாக்யராஜை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார்.
இதற்கிடையே பாரதிராஜாவுடன் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாக்யராஜ் அங்கு வேலை பார்த்துக் கொண்டே இவரிடமும் டச்சில் இருந்தார். அதன் பின்னர் ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தில் இயக்குநராக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். அதனைதொடர்ந்து பிரவீனாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த பாக்யராஜ், எம்ஜிஆரிடம் இதனை சொல்ல, எம்.ஜி.ஆரே அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.
கல்யாணமான பின்னர் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை; ஆனாலும், வாழ்க்கை சென்று கொண்டிருந்தது; இதற்கிடையே பிரவீனா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் பூர்ணிமா உடன் பாக்யராஜுக்கு நெருக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது.
இதைக் கேள்விப்பட்ட பிறகு பிரவீனா மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார். காரணம், அவர் சம்பாதித்து வைத்த சொத்தெல்லாம் பாக்யராஜுக்கு வந்தது. பிரவீனா இறந்த உடன் பாக்யராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். அந்த கல்யாணத்தையும் எம்ஜிஆர் தான் நடத்தி வைத்தார்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்