தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Balu Mahendra: தோள் மேல் கை போட போன பாலு மகேந்திரா; கடுப்பான எம்.ஜி.ஆர்! - ஷோபா தற்கொலை பஞ்சாயத்து!

Balu Mahendra: தோள் மேல் கை போட போன பாலு மகேந்திரா; கடுப்பான எம்.ஜி.ஆர்! - ஷோபா தற்கொலை பஞ்சாயத்து!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 28, 2024 06:10 AM IST

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதில் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆரும் கலந்து கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்கும் பொழுது, பாலு மகேந்திரா உரிமையாக எம்ஜி ஆர் -ன் தோள் கையை போட போக, அதை எம்.ஜி.ஆர் அனுமதிக்காமல், தட்டி விட்டார்.

பாலு மகேந்திரா!
பாலு மகேந்திரா!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “ அவர் இயக்கும் படங்களில் முக்கியமான காட்சிகளை இவர் சொல்லிக் கொடுக்கும் பொழுது, அதில் நடிக்கும் நடிகைகளுக்கு, இவர் மேல் காதல் வந்துவிடும். அப்படித்தான் நடிகை அர்ச்சனாவிற்கு, பாலு மகேந்திராவின் மீது காதல் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஒன்றாக சில காலம் வாழ்ந்து விட்டு பின்னர் பிரிந்தனர். 

ஏணிப்படிகள் படத்தை இயக்கும்போது, நடிகை சோபாவும் பாலுமகேந்திராவும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பில், தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.இதனையடுத்துதான் அவர்கள் இருவரும் காதலித்து வந்தது கோலிவுட்டிற்கு தெரிந்தது. 

அதை தொடர்ந்து, பாலு மகேந்திராவும், ஷோபாவும்  கல்யாணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியே வந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஷோபா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் பாலு மகேந்திரா தான் அவரை கொலை செய்துவிட்டார் என்றும் அந்த வழக்கில் இருந்து பாலுவை காப்பாற்றியது எம்.ஜி,ஆர் என்றும் சொல்லப்பட்டது. 

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதில் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆரும் கலந்து கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்கும் பொழுது, பாலு மகேந்திரா உரிமையாக எம்ஜி ஆர் -ன் தோள் கையை போட போக, அதை எம்.ஜி.ஆர் அனுமதிக்காமல், தட்டி விட்டார். 

இதனையடுத்து அவர்கள் இணைந்து இருக்கும் போட்டோக்கள் செய்திக்காக பத்திரிக்கைக்கு சென்றது. ஆனால் அன்று இரவே ஜே பி ஆர் பாலுமகேந்திராவுடன் எம்.ஜி.ஆர் இருக்கும் புகைப்படங்கள் எதுவும் செய்திகளில் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதற்கு காரணமாக, ஒரு குற்றவாளியுடன் நான் நிற்பது மக்களிடம் சென்று சேரக்கூடாது என்றும் எம்.ஜி,ஆர் விரும்பியதாக சொல்லப்படுகிறது

வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில், நடிகை மோகினி உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள். அவர் இறந்த போது கூட, அவர் முகத்தை பார்ப்பதற்கு மோகினியை பாலுமகேந்திரா வீட்டு தரப்பில் யாரும் அனுமதிக்கவில்லை” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்