Dhanush Aishwarya: ரஜினி வீட்டிற்குள் ஜாதி?..ரூமுக்குள் வர கடும் கட்டுப்பாடு; தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து காரணம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Aishwarya: ரஜினி வீட்டிற்குள் ஜாதி?..ரூமுக்குள் வர கடும் கட்டுப்பாடு; தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து காரணம் என்ன?

Dhanush Aishwarya: ரஜினி வீட்டிற்குள் ஜாதி?..ரூமுக்குள் வர கடும் கட்டுப்பாடு; தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து காரணம் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 19, 2024 04:48 PM IST

ரஜினி காலா, கபாலி திரைப்படங்களிலெல்லாம் நடித்திருக்கிறார் அப்படி இருக்கும் போது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம் அவர் நடித்திருக்கிறார்கள்தான். ஆனால் அது அந்த இயக்குனரின் பார்வை.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து!

இது குறித்து அவர் பேசும் போது, “ 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யாவும், தனுஷூம் தற்போது பிரிய வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். 

குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். நீதிமன்றம் அவர்களுக்கு ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்திருக்கிறது. இந்த காலத்தில், அவர்கள் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமா?, இல்லை பிரிய வேண்டுமா? அல்லது அவர்களுக்காக வாழ வேண்டுமா? உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்து, முடிவை சொல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறி இருக்கிறது.

ரஜினி குடும்பத்தில், தனுஷ் குடும்பத்திற்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை.

ஆனால் விவாகரத்து ஆன பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். பெரிய குடும்பத்தில் பெண் எடுக்கும் பொழுது, அந்த குடும்பத்திற்கு மருமகன் அடிமையாக தான் இருந்தாக வேண்டும் 

ரஜினி குடும்பத்தில், தனுஷ் குடும்பத்திற்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை. அவர்களை உரிய முறையில் நடத்தவில்லை. அவர்களுக்கு இடையில் ஜாதி என்ற ஒன்றும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. 

ரஜினி காலா, கபாலி திரைப்படங்களிலெல்லாம் நடித்திருக்கிறாரே? 

ரஜினி காலா, கபாலி திரைப்படங்களிலெல்லாம் நடித்திருக்கிறார் அப்படி இருக்கும் போது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம் அவர் நடித்திருக்கிறார்கள்தான். ஆனால் அது அந்த இயக்குனரின் பார்வை. 

யார் யார் எந்தெந்த ரூமுக்குள் வரவேண்டும் என்பது குறித்தான கட்டுப்பாடு இருக்கிறது.

ரஜினி வீட்டில் பெரிதாக ஒன்றும் ஜாதி பார்க்க வில்லைதான். ஆனால் ஒரு வித இடைவெளி அங்கு இருக்கிறது. இவ்வளவு ஏன், அவர் இருக்கும் வீட்டிலேயே யார் யார் எந்தெந்த ரூமுக்குள் வரவேண்டும் என்பது குறித்தான கட்டுப்பாடு இருக்கிறது. எல்லா ரூமுக்குள்ளும் நீங்கள் அவ்வளவு எளிதாக சென்று விட முடியாது.

தனுசுக்கும் அவரது பெற்றோர் இரண்டாவது கல்யாணம் செய்து வைப்பார்கள்

தனுஷ் உடைய அப்பாவும் பெரிய கண்ணியவான் என்று சொல்லி விட முடியாது. அவருடன் இருக்கக்கூடிய எல்லா பணியாளர்களுமே பெண்கள்தான்; அவருடைய மூத்த மகன் செல்வராகவனும் தன்னுடைய மனைவியான சோனியா அகர்வாலை பிரிந்து தற்போது இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேபோல தனுசுக்கும் அவரது பெற்றோர் இரண்டாவது கல்யாணம் செய்து வைப்பார்கள்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.