தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Haasan: சர்ச்சையோ சர்ச்சை.. வாணி முதல் கெளதமி வரை.. கமலின் காதலும் பிரிவும்!

Kamal Haasan: சர்ச்சையோ சர்ச்சை.. வாணி முதல் கெளதமி வரை.. கமலின் காதலும் பிரிவும்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 22, 2024 07:24 AM IST

வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கமல்ஹாசன் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பொதுவாக ஹிந்தியில் நீங்கள் பெரிய ஆளாக வேண்டும் என்றால், அங்குள்ள ஆளுமை ஒருவரின் ஆதரவு வேண்டும்.

கமல்ஹாசன் காதல் வாழ்க்கை!
கமல்ஹாசன் காதல் வாழ்க்கை!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ கமல்ஹாசன் டான்சராக இருக்கும் பொழுதே, காதல் செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்த பெண் மிகவும் ஒல்லியாக இருப்பார். அந்த காதல் ஒரு கட்டத்தில் முறிந்து போய்விட்டது. 

காரணம், அந்த பெண் இறந்து போய்விட்டது. இதனையடுத்து அவர் சினிமா துறையில் இறங்கினார். படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடித்து பிரபலமாகி, மேலே வந்து கொண்டிருந்த பொழுது, மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தில் நடிகை வாணி கணபதியோடு இணைந்து நடித்தார். 

அதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. டான்சர், நல்ல உயரம், அழகான தோற்றம், ஐயங்கார் என எல்லாமும் கனகச்சிதமாக பொருந்திய நிலையில், வாணி கணபதியை காதலிக்க ஆரம்பித்தார் கமல். 

ஒரு கட்டத்தில் வாணியும், கமலின் காதலை ஏற்றுக்கொள்ள, கமல் தன்னுடைய அம்மாவிடம் சென்று விஷயத்தை சொல்கிறார். ஆனால், கமல் அம்மாவோ.. இப்போதுதான் சினிமாவில் படிப்படியாக வளர ஆரம்பித்து இருக்கிறாய். இப்போழுது போய் கல்யாணம் என்கிறாயே என்று கேட்க, கமல் அம்மாவை சமாதானம் செய்து, வாணியை திருமணம் செய்து கொண்டார். 

வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கமல்ஹாசன் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பொதுவாக ஹிந்தியில் நீங்கள் பெரிய ஆளாக வேண்டும் என்றால், அங்குள்ள ஆளுமை ஒருவரின் ஆதரவு வேண்டும். 

அந்த ஆதரவாய் வந்தவர்தான் நடிகை சரிகா. அந்த ஆதரவு நாளடைவில் காதலாக மாறியது. அதில் சரிகா கர்ப்பமும் ஆனார். அது குறித்து வட இந்திய பத்திரிகைக்கு ஓப்பனாக பேட்டியும் கொடுத்தார். இதனை கேள்விபட்ட வாணி கடும் கோபம் அடைந்தார். இதற்கிடையே, கமல்ஹாசன் வாணிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி விவாகரத்து செய்தார். 

ஆனால் பின்னாளில் வாணி கணபதி அது குறித்தான உண்மையைச் சொன்னார். அதில் தனக்கு குழந்தை பாக்கியம் இருப்பதாகவும், கமலுடன் இருந்த காலத்தில் மூன்று முறை கருவை கலைத்திருக்கிறேன் என்றும் சொன்னார். 

இந்த நிலையில்தான் தேவர் மகன் திரைப்படத்தில் கௌதமியுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார் கமல்ஹாசன். இது குறித்தெல்லாம் கேள்வி பட்ட சரிகா ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வந்து விட்டார். அப்போது கமல் - கெளதமி நெருக்கமாக இருப்பதை பார்த்து விட்டார். இதில் கடும் கோபம் அடைந்த அவர், கமலிடம் இருந்து பிரிந்து விட்டார்.  அதன் பின்னர் கெளதமியுடன் வாழ்ந்து வந்த கமல், அவரையும் பிரிந்து விட்டார்” என்று பேசினார்

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்