Saattai Yuvan: டைரக்டர் பாலா கொடுத்த மறுத்த வாய்ப்பு.. விர்ரென்று ஓடிய 3 வருடங்கள்.. பரோட்டா மாஸ்டர் ஆன யுவன்!
கிட்டத்தட்ட 1 வாரம் அந்தக்கடையில் வேலை செய்தேன். முடியையும், தாடியையும் வளர்த்து இருந்தேன். இந்த நிலையில் அந்தப்படம் திடீரென்று தள்ளிப்போவதாக சொல்லப்பட்டது.
சாட்டை திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் நடிகர் யுவன். சில படங்களில் நடித்த அவர், தற்போது ஹோட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த முடிவை எடுத்ததிற்கான காரணம் குறித்து, அவர் பிஹைண்ட் வுட்ஸ் சேனலில் அண்மையில் பேசினார்.
அதில் சாட்டை யுவன் பேசும் போது, “ இரண்டு பெரிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று கொரோனா. இன்னொன்று பாலா சார் திரைப்படத்தில் கமிட் ஆனது. அந்த படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்திருந்தேன். அந்த திரைப்படத்தில் வரும் என்னுடைய கதாபாத்திரம் ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவனின் கதாபாத்திரம்.
அதற்காக நாகூரில் இருந்த கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். காலை 7 மணிக்கு கடைக்குள் செல்வேன். 2 மணி வரை பரோட்டா போடுவேன்.அதன் பின்னர் பிரேக் இருக்கும். பிறகு, மாலை 6 மணிக்கு ஹோட்டலில் ஏறினேன் என்றால் இரவு 12 மணி வரை வேலை நடக்கும்.
கிட்டத்தட்ட 1 வாரம் அந்தக்கடையில் வேலை செய்தேன். முடியையும், தாடியையும் வளர்த்து இருந்தேன். இந்த நிலையில் அந்தப்படம் திடீரென்று தள்ளிப்போவதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் அந்தப்படம் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இந்தத்தகவல் எனக்கு வருவதற்குள்ளாகவே 3 வருடங்கள் ஓடி விட்டன.
அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்துதான் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டேன். அதன் பின்னர் நான் கிட்டத்தட்ட 10 - த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பின்னர் இந்த ஹோட்டலை ஆரம்பித்தேன்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்