S. A. Chandrasekhar: 'கேப்டனுக்கு அரசியல் வியாபாரம் தெரியல' - எஸ்.ஏ.சந்திரசேகர்
மறைந்த விஜயகாந்த் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்து இருந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்தார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனிடையே விஜயகாந்த் இறப்பு தினத்திற்கு தன்னால் வர முடியாத எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் தொடர்பாக News7Tamil சேனலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்து இருந்தார்.
அவர் கூறுகையில், “ நானும், விஜயகாந்தும் 17 படங்கள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். நாங்கள் இருவரும் முரட்டுத் தன்மை கொண்டவர்கள். நான் பார்க்க முரட்டு தனமாக இருக்க மாட்டேன் ஆனால் நடந்து கொள்வது முரட்டு தனம். ஆனால் அவர் பார்க்கவும், நடந்து கொள்வதும் முரட்டு தனம்.
கலைத்துறையில் ஈகோ வருவது எளிது. ஆனால் எங்களுக்குள் அது வரவே இல்லை. தவறை தட்டிக்கேட்பது மக்களுக்குப் போராடும் நாயகனாக அவரை காட்டி இருக்கிறேன். 28 ஆம் தேதி அவர் இறப்பு அன்று நான் வெளிநாட்டிலிருந்தேன்.
மீட்டிங் சென்று இருந்தேன். ஆனால் மனதளவில் அதை என்னால் செய்ய முடியவில்லை. வரவும் முடியவில்லை. அந்த இரண்டு நாள் முழுக்க டிவி முன்பு தான் அமர்ந்து இருந்தேன். ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து இருக்கிறான் என்பதற்குச் சாட்சியாக இருந்தது அந்த ஊர்வலம்.
சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால் அவர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர். நான் இரண்டு வருடங்கள் முன்பு அவரை பார்த்தேன். ஏதோ ஒரு விஷயம் பேச முயன்றார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. எப்படிப்பட்ட மனிதர் இப்படி இருக்கிறார் என பார்த்து அழுகை வந்தது. நான் தான் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தார்.
சினிமாவை தாண்டி நிறைய பேருக்கு உதவி, சாப்பாடு போட்டு இருக்கிறார். சம்பள விஷயம் கூட பேச மாட்டார். அவருக்கு அரசியல் வியாபாரம் கூட தெரியாது. ஒரு நல்ல அரசியல் செய்ய கூடியவர்.
விஜயகாந்திற்கு கதை சொல்லும் போது ஒன் லைன் தான் சொல்லுவேன். டேட் என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் நான் உடனே செய்கிறேன் என சொல்வார். 17 படங்களுக்கும் இப்படி தான் சொன்னார்” என்றார்.
நன்றி: News 7 Tamil
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்