Bigg Boss 8: இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லையே.. பிக் பாஸுக்கு செல்லும் காமெடி ஜாம்பவான்
Bigg Boss 8: தமிழ் சினிமாவின் மிகப் பெரிய காமெடி ஜாம்பவன் ஒருவர் பிக் பாஸ் 8 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Bigg Boss 8: உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி, களேபரம் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது.
கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக ஒருபக்கமும், இன்னொரு பக்கம் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்க இருப்பதாகவும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அடுத்த சீசன்
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவிருக்கும் சீசனை நடிகர் சரத்குமார் தான் தொகுத்து வழங்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே, சன் டிவியில் ஒளிப்பரப்பான மாஸ்டர் செஃப், நம்ம ஊரு ஹீரோ உள்ளிட்ட நிகழ்ச்ச்களை தொகுத்து வழங்கினார்.
வைரலாகும் பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்?
பிக் பாஸ் 8 வது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்றும், 8 வது சீசனின் போட்டியாளர்கள் யார் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுக்க தொடங்கியுள்ள நிலையில் 8 ஆவது சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் என்று ஒரு லிஸ்ட் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.
காமெடி ஜாம்பவன்
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய காமெடி ஜாம்பவனான நகைச்சுவை நடிகர் செந்தில், பிக் பாஸ் 8 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. சினிமாவிலேயே நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் செந்தில் உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் கண்டிப்பாக பொழுதுபோக்கிற்கு குறைவே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்பதால் இதை நம்பலாமா? வேண்டாமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஏற்கனவே நடிகர் ரியாஸ் கான், நடிகை பூனம் பஜ்வா, நடிகர் கார்த்திக் குமார், மூத்த நடிகர் விஜய் குமார், பப்லூ பிருத்விராஜ், பாடகி ஸ்வேதா மேனன், பாடகி கல்பனா, செல்வாக்கு செலுத்துபவர் அமலா ஷாஜி, மகபா ஆனந்த், ரோபோ சங்கர், சோனியா அகர்வால் மற்றும் கிரண் போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.
கமல் ஹாசன் விலகல்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை நடிகர் கமல் ஹாசன் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், சினிமாவில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்