தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu Marriage: நம்பாதீங்க.. உண்மை இல்லை.. திருமண வதந்திக்கு விளக்கம் கொடுத்த சிம்பு தரப்பு!

Simbu Marriage: நம்பாதீங்க.. உண்மை இல்லை.. திருமண வதந்திக்கு விளக்கம் கொடுத்த சிம்பு தரப்பு!

Aarthi Balaji HT Tamil
May 30, 2024 10:04 AM IST

Simbu Marriage: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரின் மகளை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்தி வதந்தி என தெரிய வந்துள்ளது.

நம்பாதீங்க.. உண்மை இல்லை.. திருமண வதந்திக்கு விளக்கம் கொடுத்த சிம்பு தரப்பு
நம்பாதீங்க.. உண்மை இல்லை.. திருமண வதந்திக்கு விளக்கம் கொடுத்த சிம்பு தரப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

மாஸான ரீ - எண்டரி

கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ- எண்டரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே பல பிரச்னைகள், சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் பெற்றோர் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணத்திற்காக வரன் தேடி வருகிறார்கள்.

41 கடந்தும் திருமணம் செய்யவில்லை

இருப்பினும், 41 வயதாகும் சிம்பு இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கிறார். இதன் காரணமாக அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன .

சிம்புவுக்கு திருமணம்

அதன்படி கடந்த இரண்டு தினங்களாக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரின் மகளை, சிம்பு திருமணம் செய்ய இருப்பதாகவும் , அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது . இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி திரையுலக ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறி இருந்தது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில் சிம்புவுக்கும், தெலுங்கு சினிமா நடிகரின் மகளுக்கு திருமணம் என பரவி வந்த செய்தி முற்றிலும் வதந்தி என அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டது.

காதல் இல்லை.. வதந்தி தான்

சில மாதங்களுக்கு முன்பு கூட சிம்பு இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக சிம்புவும் நயன்தாராவை காதலித்து வந்தார் . ஆனால் பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அந்த காதலும் திருமணம் வரை நீடிக்கவில்லை.

சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும், சிம்புவும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. அது வெறும் வதந்தியாகவே முடிந்தது. நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகை வரலட்சுமியும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதுவும் பொய்யானது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்