Netflix OTT: வெயிட்டிங்கில் வெறி ஏற்றிய 773 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.. நெட்பிளிக்ஸ் செய்யப்போகும் சம்பவம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Netflix Ott: வெயிட்டிங்கில் வெறி ஏற்றிய 773 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.. நெட்பிளிக்ஸ் செய்யப்போகும் சம்பவம்..

Netflix OTT: வெயிட்டிங்கில் வெறி ஏற்றிய 773 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.. நெட்பிளிக்ஸ் செய்யப்போகும் சம்பவம்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 08, 2025 09:44 AM IST

ரூ.773 கோடி பட்ஜெட்டில் உருவான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ஹாவோக் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

Netflix OTT: வெயிட்டிங்கில் வெறி ஏற்றிய 773 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.. நெட்பிளிக்ஸ் செய்யப்போகும் சம்பவம்..
Netflix OTT: வெயிட்டிங்கில் வெறி ஏற்றிய 773 கோடி ரூபாய் பட்ஜெட் படம்.. நெட்பிளிக்ஸ் செய்யப்போகும் சம்பவம்..

ஹாவோக் ஓடிடி வெளியீட்டு தேதி

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்தப் பெரிய பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் பெயர் ஹாவோக் (Havoc). ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இந்த படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஹாவோக் என்றால் பேரழிவு என்பது பொருள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம் இப்போது தான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் "ஒரு முழுமையான அழிவு நிகழப் போகிறது. ஹாவோக்கை நெட்ஃபிலிக்ஸில் மட்டுமே பாருங்கள்" என்கிற டிவிட்டருடன் புதிய போஸ்டரை நெட்ஃபிளிக்ஸ் நேற்று ஏப்ரல் 7 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

ஹாவோக் திரைப்படம் பற்றி...

ஹாவோக் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம். இந்த படத்தை காரெத் இவான்ஸ் இயக்கியுள்ளார். இதில் டாம் ஹார்டி, ஜெஸ்ஸி மெய் லீ, ஃபாரஸ்ட் விடேக்கர், டிமோதி ஒலிஃபண்ட் போன்றோர் நடித்துள்ளனர். யுகே மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. 90 மில்லியன் டாலர்கள் (அதாவது சுமார் ரூ. 773 கோடி) பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி உள்ளது.

படத்தின் கதை

ஒரு போதைப்பொருள் ஒப்பந்தத்தில் சிக்கிய ஒரு துப்பறியும் அதிகாரி அண்டர் வோர்ல்டிற்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு சிக்கியுள்ள ஒரு அரசியல்வாதியின் மகனை மீட்க அவர் எடுக்கும் முயற்சிகள் தான் இந்த ஹாவோக் திரைப்படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதில் டாம் ஹார்டி, வாகர் என்ற துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இயக்குனர் இவான்ஸுடன் டாம் ஹார்டியும் தயாரிப்பாளராக உள்ளார்.

தாமதமான வெளியீடு

உண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் சில காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டியதால் படத்தின் வெளியீடு தாமதமானது என இயக்குனர் இவான்ஸ் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தின் படப்பிடிப்புகளும் முடிந்தன. இதையடுத்து படத்தின் மற்ற பணிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது இறுதியாக வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.