சிறைச்சாலை கொடுத்த பாடம்.. ‘திருந்தி வாழ நினைக்கிறேன்.. ஆனா சத்யா கொடுக்கும் டார்ச்சர தாங்க முடியல’ - ரவுடி பேபி பேட்டி!
சிக்கந்தர் அவருடைய முதல் மனைவியின் முழு சம்மதத்தோடு தான் என்னுடன் லிவிங் டு கெதரில் இருக்கிறார். இரண்டு பேரையுமே சிக்கந்தர் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். -ரவுடி பேபி சூர்யா

டிக்டாக், யூடியூப் விடியோக்களின் மூலம் பிரபமானமானவர் ரவுடி பேபி சூர்யா. இவரது நிஜப் பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், அதனால் பல சிக்கல்களையும் சந்தித்தார்.
பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது காதலன் சிக்கந்தர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு குண்டர் சட்டத்தில் இவர்களை சிறையில் அடைத்தது. ஓராண்டு சிறைக்குப்பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றனர். புகாரைக்கொடுத்து விட்டு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
நான் ஆபாசமாக நடந்து கொள்வதில்லை.
அப்போது சூர்யா பேபி பேசும் போது, ‘ ரவுடி பேபி சூர்யா என்கின்ற சுப்புலட்சுமி நான் தான். நான் இப்போது எந்த ஒரு பிரச்சினைக்கும் செல்வதில்லை; முன்பு போல சோசியல் மீடியாவில் நான் ஆபாசமாக நடந்து கொள்வதில்லை. காரணம், சிறை என்பது ஒருவரை கண்டிக்க பயன்படும் இடம் மட்டுமல்ல. அது திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறது. சிறை சென்று வந்த பின்னர் இனிமேலாவது நாம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நான் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
Youtube-ல எனக்கென்று 6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இப்போது புதிதாக youtube ற்கு வரும் நபர்கள் சீக்கிரம் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக என்னுடைய பழைய கால சம்பவங்களை பேசி கடுமையாக வசை பாடுகிறார்கள்.என்னை பட்டப்பெயர்கள் வைத்து கேவலப்படுத்துகிறார்கள். குறிப்பாக சத்யா என்கிற பெண், என்னை கடுமையாக விமர்சனம் செய்கிறார். மக்கள் பார்வை சித்ரா என்பவர் மூலமாகத்தான் எனக்கு அவர் பழக்கமானார். அவரை தற்காலிகமாக எனக்கு கொஞ்சம் பிடிக்காமல் இருந்தது. அதனால் அவரை விட்டு நான் ஒதுங்கி விட்டேன். அவருடன் நான் பண விஷயத்தில் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டிருந்தேன். இந்த நிலையில் என்னுடைய பணம் அவரிடம் கொஞ்சம் இருந்தது.
கொலை மிரட்டல்
அந்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது, பணத்தை திருப்பித் தர முடியாது என்று சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவரது கணவரை வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். சிக்கந்தர் அவருடைய முதல் மனைவியின் முழு சம்மதத்தோடு தான் என்னுடன் லிவிங் டு கெதரில் இருக்கிறார். இரண்டு பேரையுமே சிக்கந்தர் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். ஆனால் இதற்கிடையே சத்யா சிக்கந்தரின் முதல் மனைவி தூண்டிவிட்டு, இருவரும் சேர்ந்து
எனது வீட்டிற்கு வந்து தவறான செயல்களில் ஈடுபட்டார்கள். இதனால் என்னுடைய மகனின் படிப்பு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இரண்டு பேரையும் பேசக்கூடாது எச்சரித்து அனுப்பினார்கள்; பிரச்சினை முடிந்து வெளியே வரும்பொழுது அவர் என்னை அவதூறாக பேசினார். மேலும், இன்று என்னிடம் நீ தப்பித்து விட்டாய் ஒருநாள் நிச்சயமாக என்னிடம் மாட்டுவாய் என்றார். இந்த நிலையில் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. காவல்துறை எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது’ என்று பேசினார்.

டாபிக்ஸ்