Sivakarthikeyan: நானும் ‘பராசக்தி’.. நீங்களும் ‘பராசக்தியா’.. தலைப்பு சர்ச்சையில் சிவா..விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி
Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கும், விஜய் ஆண்டனியின் திரைப்படத்திற்கும் ஒரே டைட்டில் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா இணையும் படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான டீசரும் இன்று வெளியிடப்பட்டது. இதற்கிடையே இன்று வெளியான விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
இதனின் தெலுங்கு பதிப்பிற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஆண்டனி இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கடந்த ஆண்டே தெலுங்கு படத்தின் டைட்டிலை பதிவு செய்ததிற்கான தேதியை வட்டமிட்டு காண்பித்து இருக்கிறார்.
அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்திலும் கமிட் ஆனார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.
இதில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் ஆண்டனியின் ‘ சக்தி திருமகன்’
விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம் உருவாக இருக்கிறது. அவரது 25வது திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.
‘அருவி’ இயக்குநருடன்
‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் வாயிலாக யதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரின் ‘அருவி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.
அதனைதொடர்ந்து வெளியான ‘வாழ்’ திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்தப்படம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.
படக்குழு விபரம்
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படம்
குடும்பம், ஆக்ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழந்த கதையாக நிச்சயம் ‘சக்தி திருமகன்‘ பார்வையாளர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாக அவருடைய கெரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமையும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
தற்சமயம் படம் போஸ்ட் புரடெக்ஷனில் உள்ளது. படம் குறித்து கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்