MTV Splitsvilla X5: காதல் குகையில் ஒளிந்திருந்த எக்ஸ் காதலி! கடைசியில் என்ன ஆச்சு? பதைபதைப்புடன் சென்ற எபிசோடு
MTV Splitsvilla: காதல் குகையில் நடந்த டுவிஸ்டாக தனியே அனுப்பப்பட்ட ஹர்ஷ், ஒளிந்திருந்த எக்ஸ் காதலியை பார்த்து ஷாக் ஆனதுடன், அவருடன் மீண்டும் காதல் வயப்படுவாரா என்கிற பரபரப்புடன் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 இந்த வார எபிசோட் அமைந்திருந்தது. இதன் தமிழ் பதிப்பு ஜியோ சினிமாவில் ஸ்டீரிம் ஆகிறது.

காதல் குகையில் ஒளிந்திருந்த எக்ஸ் காதலி! கடைசியில் என்ன ஆச்சு என்று பதைபதைப்புடன் சென்ற MTV Splitsvilla X5 எபிசோடு
சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உள்ளே உள்ள ஸ்பிளிட்ஸ் வில்லா போட்டியாளர்களுக்கும் செம ட்விஸ்ட் காத்திருந்தது.
காதல், கேலி விளையாட்டுக்களுடன் சலசலத்த அந்த வில்லா திடீரென பேக் ஸ்டாபிங், துரோகம் நிறைந்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
தொகுப்பாளர் தனுஜ் ஸ்ப்ளிட்ஸ்வில்லன்களை அவர்களின் டேட்டிங் பற்றி பகிர்ந்து கொள்ள தூண்டினார். இந்த காதல் பேச்சுக்களுக்கு மத்தியில்,யாரை வெளியேற்றுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.