Tamil News  /  Entertainment  /  Rohini Melts On The Anniversary Of Raghuvaran
குடும்பத்துடன் ரகுவரன்
குடும்பத்துடன் ரகுவரன்

Raghuvaran Death Anniversary: ரகுவரன் நினைவு நாளில் ரோகிணி உருக்கம்

19 March 2023, 10:22 ISTPandeeswari Gurusamy
19 March 2023, 10:22 IST

Rohini molleti: "மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது.

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமானர் ரகுவரன்.

ட்ரெண்டிங் செய்திகள்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகுவரன் 1980 முதல் 2009 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக இவர் அறிமுகமானாலும், தனது வித்தியாசமான குரல் மாடுலேஷன், ஸ்டைல், லுக் போன்றவற்றின் மூலம் வில்லன் நடிகராக பெயர் பெற்றார்.

பொதுவாக திரையில் அவரது வசனங்களை விட உடல் அசைவுகளாலே கதையை கடத்திவிடும் ஆளுமை படைத்தவர் ரகுவரன். இந்நிலையில் நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல திறமைகளை உள்ளடக்கிய பன்முக கலைஞர் ரோகிணியைக் காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இருந்தாலும் ரோகிணி தொடர்ச்சியாக ரகுவரனுடனான தனது ஆத்மார்த்தமான காதலையும் நினைவுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். ரகுவரைவனை சிறந்த நடிகராக மக்கள் பார்த்திருந்த நிலையில் அவரது இசை ஆர்வம் அவர் உயிரிரோடு இருந்த வரை பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ரகுவரனின் மறைவிற்கு பிறகு அவரது பாடல் மற்றும் இசை ஆர்வத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார் ரோகிணி. ரகுவரனின் இசை ஆல்பத்தை நடிகை ரோகிணி மற்றும் அவரது மகன் சாய் ரிஷிவரன் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். 'ரகுவரன் - ஒரு இசைப் பயணம்' எனப் பெயரிடப்பட் அந்த இசை ஆல்பம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

'ரகுவரன் - ஒரு இசைப் பயணம்'
'ரகுவரன் - ஒரு இசைப் பயணம்' (Rohini Molleti (facebook))

அந்த வகையில் ரகுவரனின் நினைவு நாளான இன்று ரோகிணி அவர் தனது டுவிட்டர் பதிவில்,

"மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. ரகு சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார், மேலும் ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்" என்று ஆசையை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனது நேர்காணல் ஒன்றில் ஒருமுறை நானும் ரகுவும் ரிஷியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றோம். அப்போது ரிஷி திருக்குறள் சொல்வதை பார்த்த ரகு இவ்வளவு அழகாக திருக்குறள் சொல்றானே மா என்றார். நான் தான் அவனுக்கு சொல்லிக்கொடுத்தேன் என்றேன்.

ரிஷியுடன் ரகுவரன்
ரிஷியுடன் ரகுவரன் (Rohini Molleti (Facebook))

திருக்குறள் இவ்வளவு அழகாக சொல்கிறான் என்ன அன்று சொல்லிய அந்த ரகு இப்போது இருந்து இருந்தால் ரிஷியை பார்த்து எப்படி ரசித்து இருப்பார் எப்படி பெருமைப்பட்டு இருப்பார் என்பதை நினைக்கும் போது அது மிகவும் வலி தர கூடிய விஷயமாக இருக்கிறது" தெரிவித்திருந்தார். ரகு உயிரோடிருக்கையில், அவரது திரைப்படங்களில், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களால் பெரும் ஆராவாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரசிக்கப் பட்டது குறித்து அவருக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஒருவேளை ரசிகர்கள் தன்னை இத்தனை ஆராதிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ந்திருப்பார். ஆனால், அவருக்கு அப்போது அதெல்லாம் தெரியாது. நானும், அவரது நண்பர்களும் அவரிடம் அவரது நடிப்புத்திறனைப் பற்றி சிலாகித்துப் பேசுவோம் தான், ஆனால் அவருக்கு அது போதவில்லை. அவரது மரணத்திற்குப் பிறகு ரசிகர்கள் திரையில் ரகுவரனைக் கண்டதுமே ஆர்பரித்துக் கொண்டாடுவதைக் காணும் போது, இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே தோன்றும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதேசமயம் ரகுவரன் மறைந்த நாளில் செய்தியாளர்கள் தன் குடும்பத்திற்கான தனிமையை தர மறுத்தனர் என்று அவர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

டாபிக்ஸ்