Rocking Star Yash: பின்னால் இருந்த இந்தியர்.. கொக்கி போட்டு தூக்கிய ராக்கி பாய்! - ராமாயணத்தை தயாரிப்பது ஏன்? - பேட்டி!
இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சேர்க்கும் வகையிலான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதற்காக, நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன்.

நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கே.ஜி.எஃப் புகழ் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை தயாரிக்க இருக்கிறது.
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக இந்த தொன்மை வாய்ந்த கதையை, பெரிய திரையில் கொண்டு வருவதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடிகர் யாஷ்ஷை சந்தித்து தனது லட்சியங்களை குறித்து விவாதித்திருக்கிறார்;அதன் போது யாஷின் உணர்வும், இவருடன் ஒத்திருந்ததை அறிந்தார். இந்தப்படத்தின் இயக்குநராக பிரபல இயக்குநர் நித்தேஷ் திவாரி கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.
யாஷ் பேட்டி:
இந்தக்கூட்டணி குறித்து யாஷ் பேசுகையில், “இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சேர்க்கும் வகையிலான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. அதற்காக, நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிறந்த வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தேன்.
இந்நிறுவனத்தின் பின்னணியில் சக இந்தியர் ஒருவர் இருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமித் மல்ஹோத்ராவும், நானும் சந்தித்து, பல்வேறு அமர்வுகளில் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். அதன் போது தற்செயலாக இந்திய சினிமாவுக்கான தொலைநோக்குப் பார்வையில், எங்களின் கருத்தாக்கம் சரியாக இணைந்தது.
நாங்கள் பல்வேறு திட்டங்கள் குறித்து தீவிரமாக விவாதித்தோம். இந்த விவாதங்களின் போது, ராமாயணமும் இடம்பெற்றது. ராமாயணம் ஒரு பாடமாக என்னுடன் ஆழமாக எதிரொலிக்கிறது. அதற்காக என் மனதில் ஒரு அணுகுமுறையும் இருந்தது.
ராமாயணத்தை இணைந்து தயாரிப்பதற்கான குழுவில் இணைவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் ஒரு இந்திய திரைப்படத்தை உருவாக்கும் எங்களது கூட்டுப் பார்வை மற்றும் அனுபவத்தை ஒன்றிணைத்திருக்கிறோம்.” என்று பேசினார்.
முன்னதாக, பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி சமீபத்தில் ராமாயண படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதா தேவியாக சாய் பல்லவியும், அனுமனாக சன்னி தியோலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தப்படத்தில் பிரபல நடிகர் யாஷ் ராவணனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் யஷ் நடிக்கிறாரா?
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, யாஷ் நீண்ட காலமாகவே ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பப்பட வில்லையாம். அவருக்கு 80 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம். இந்த நிலையில் அவர் இறுதியாக அந்தப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து இருக்கிறார்.
முன்னதாக, ராமாயணா படத்தில் நடித்த நடிகர்களின் ஆடைகள் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கசிந்த நிலையில், நிதேஷ் திவாரி அது குறித்து மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறாராம். இதனையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் யாரும் போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறையையும் விதித்து இருக்கிறாராம்.
ராமாயண நடிகர்கள் பற்றி
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டு இருக்கும் தகவலின் படி கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோலை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
ராமரின் மாற்றாந்தாய் கைகேயி கதாபாத்திரத்தில் லாராவும், மந்தாராவாக ஷீபாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாஷின் வரவிருக்கும் படம்:
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராகியுள்ளார், நடிகர் யாஷ். இந்நிலையில் இவர் அடுத்து என்ன மாதிரியான படத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்டது.
இந்த நிலையில், யஷ் நடிக்கும் 19வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தப்படத்திற்கு டாக்சிக் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும், திரைப்படம் ஏப்ரல் 2025 ம் ஆண்டு 10 தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கீது மோகன்தாஸ் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதே போல மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்