LipLock Kiss: மனைவியின் தாய்க்கு லிப் டு லிப் கிஸ்ஸா?: இந்திரஜாவின் கணவர் செய்த விபரீத செயல்.. ஓ குடும்பமாவேவா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Liplock Kiss: மனைவியின் தாய்க்கு லிப் டு லிப் கிஸ்ஸா?: இந்திரஜாவின் கணவர் செய்த விபரீத செயல்.. ஓ குடும்பமாவேவா!

LipLock Kiss: மனைவியின் தாய்க்கு லிப் டு லிப் கிஸ்ஸா?: இந்திரஜாவின் கணவர் செய்த விபரீத செயல்.. ஓ குடும்பமாவேவா!

Marimuthu M HT Tamil Published Apr 04, 2024 12:15 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 04, 2024 12:15 PM IST

Priyanka Shankars Son-In-law Karthiks LipLock Kiss: ரோபோ சங்கரின் மனைவியும், அவரது மருமகனும் லிப் டு லிப் கிஸ் அடித்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் தாய்க்கு லிப் டு லிப் கிஸ்ஸா?
மனைவியின் தாய்க்கு லிப் டு லிப் கிஸ்ஸா?

ரோபோ சங்கர், தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் ஆவார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம், பல்வேறு குரல்களில் மிமிக்ரி செய்து அசத்துவார். குறிப்பாக, இவர் விஜயகாந்த் மற்றும் கவுண்டமணி ஆகியோரின் குரல்களில் பேசியும் அவர்களைப் போன்ற மேனரிசங்களை செய்தும் கலக்குவார்.

மதுரையில் பல்வேறு திருவிழாக்களில் மேடை கலைஞராக தன் வாழ்க்கையினைத் தொடங்கிய ரோபோ சங்கர், தன் உடல் முழுக்க ஈயத்தைப் பூசிக்கொண்டு, பாடி பில்டிங் செய்து படிப்படியாக வளர்ந்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன்பின், யாருடா மகேஷ், கப்பல் ஆகியப் படங்களில் சிறுசிறுவேடங்களிலும் பின் வாயை மூடி பேசவும் படத்தில் படம் முழுக்க தோன்றி நடித்திருப்பார். பின், மாரி, புலி, திரிஷா இல்லைனா நயன்தாரா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன், விஸ்வாசம், இரவில் நிழல் , சிங்கப்பூர் சலூன் ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார்.

ரோபோ சங்கர் மற்றும் பிரியங்கா சங்கர் ஆகிய தம்பதிகளுக்கு, இந்திரஜா என்னும் மகள் உள்ளார். அதன்பின், இவர் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா என்னும் கால்பந்தாட்ட வீராங்கனை கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனார். அதன்பின், விருமன் படத்தில் நடித்து பலரது கவனத்தினையும் ஈர்த்தார். 

இதனிடையே சமீபத்தில் மகள் இந்திரஜாவுக்கு, மதுரையில் வைத்து பிரமாண்டமாக திருமணத்தை முடித்தார், ரோபோ சங்கர். அதன்பின், ரிசப்ஷன் சென்னையில் நடந்தது. இதில் திரையுலகைச் சார்ந்த கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும், கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், தனது மகள் இந்திரஜாவின் திருமண வரவேற்பின்போது, தனது மருமகன் கார்த்திக்குக்கு லிப் டூ லிப் முத்தத்தைப் பகிர்ந்துள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரவேற்பின்போது நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது தான் இந்த உணர்ச்சி கர நிகழ்வு நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி நெட்டிசன்களால் கடுமையான விமர்சனத்தைப் பெற்றுள்ளன.

யார் இந்த கார்த்தி?: ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக். 38 வயதுடைய இளைஞர். ஆரம்பத்தில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கரும்,கார்த்திக்கும் உடன்பிறந்தவர்கள் எனக் கூறப்பட்ட நிலையில் அதனை, கார்த்திக்கின் தாய் அதனை மறுத்துள்ளார். மேலும், இந்திரஜாவுக்கு 20 வயது தான் ஆகிறது. அடிப்படையில் சமூக சேவகரான கார்த்திக், 23 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பின், இவரது குணத்தால் மயங்கிய ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா சங்கர், கார்த்திக்கை தனது மகள் இந்திரஜாவுக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இது முடிவானபின், கிட்டத்தட்ட சில நாட்களாக இந்திரஜாவின் வீட்டிலேயே மகன் போலவே தங்கியிருந்தார், கார்த்திக். தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இருந்தாலும், அக்கா - தம்பி என்று வெளியில் அறியப்படும் இருவர், பொதுவெளியில் லிப் டு லிப் கிஸ் அடித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜாவுக்கு லிப் லாக் கிஸ் அடிக்கும் போட்டோவும், பெற்றோர் முன்னிலையில் இந்திரஜா தனது கணவர் கார்த்திக்குக்கு லிப் கிஸ் அடிக்கும் போட்டோவும் வைரல் ஆகி வருகிறது. இருந்தாலும், அதனை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.