Robo Shankar: எனக்கு 38 வயசா.. இந்திரஜா அக்கா மகளா?..எவன் சொன்னான்? - வெளுத்த சங்கர் மருமகன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Robo Shankar: எனக்கு 38 வயசா.. இந்திரஜா அக்கா மகளா?..எவன் சொன்னான்? - வெளுத்த சங்கர் மருமகன்!

Robo Shankar: எனக்கு 38 வயசா.. இந்திரஜா அக்கா மகளா?..எவன் சொன்னான்? - வெளுத்த சங்கர் மருமகன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 10, 2024 07:22 AM IST

உடன்பிறந்த அக்கா மகளை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; மரபு ரீதியாக பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்தும் இருந்தார்கள்.

இந்திரஜா ஷங்கர்!
இந்திரஜா ஷங்கர்!

ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து படங்கள் நடித்து வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது உடல் மெலிந்து காணப்பட்டது. அதிலிருந்து தற்போது அவர் மீண்டு வந்திருக்கும் நிலையில், அவருடைய மகளான இந்திராஜாவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். அந்த விமர்சனங்களுக்கு இந்திரஜா மற்றும் கார்த்திக் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

இது குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அவர்கள் பேசும் போது, “பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு எங்களது கல்யாணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் என்னுடைய வயது 38 என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது உண்மையல்ல. 

கார்த்திக் பேசும் போது, “எனக்கு தற்போது 30 வயதாகிறது. கூடிய சீக்கிரத்தில் 31 வயது ஆகப்போகிறது. அவர் பேசியதால் பலர் எதற்காக ஒரு வயதான ஆளுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறீர்கள் என்ற ரீதியில் கமெண்ட் செய்திருந்தார்கள். 

உடன்பிறந்த அக்கா மகளை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; மரபு ரீதியாக பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்தும் இருந்தார்கள். 

அதற்கு நாங்கள் விளக்கம் கொடுத்ததற்கு பின்னர் அது போன்ற கமெண்டுகள் தற்போது வருவதில்லை. இப்படி ஒவ்வொரு சர்ச்சைக்கும் நாங்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அந்த கமெண்ட்கள் அப்படியே மழுங்கி செல்கின்றன. ” என்றார்.

இந்திரஜா பேசும் போது, “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் நான்கு வருடம் காதலித்து வந்தோம். தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறோம். 

அதனால் எங்களுக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்களை பார்த்து எங்களுக்குள் எதுவும் ஆகப்போவதில்லை. நான் தான் அவரிடம் என்னுடைய காதலை முதலில் சொன்னேன். ஆனால் அவர் நான்கு மாதங்களாக அலைய விட்டார்” என்றார். 

கார்த்திக் பேசும் போது, “அதற்கு காரணம் இருக்கிறது. ஒரு பக்கம் அக்கா; இன்னொரு பக்கம் மாமா. என்னை ஒரு பிள்ளை போல பாவித்து, எனக்கு சோறு போட்டு வளர்த்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது, நான் இந்த மாதிரியான ஒரு காரியத்தை செய்யும் பட்சத்தில், அவர்கள் என்னிடம் நீ இப்படி செய்யலாமா என்று கேட்டு விட்டால், என்னுடைய மனம் உடைந்து விடும். 

ஆனால், இந்திரஜா  என்னை யார் கல்யாணம் செய்து கொண்டாலும், பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்வார்கள் அல்லது ரோபோ ஷங்கரின் மகள் என்பதற்காக கல்யாணம் செய்து கொள்வார்கள். காரணம், நான் எப்படி இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் ஒரு முறை கூட நீ என்னுடைய அழகை வைத்து என்னை எடை போட்டது கிடையாது. ஆகையால் நீ என்னை கல்யாணம் செய்து கொள் என்று கேட்டாள்; அது எனக்கு மிகவும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதற்கு நான் ஓகே சொன்னேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.