‘அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’ - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’ - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!

‘அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’ - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 25, 2025 08:43 AM IST

எனக்கு நடிக்க வேண்டும் என்பது ஒரு கட்டத்தில் மிகவும் தீவிர ஆசையாக மாறியது. இதனையடுத்து நான் கம்பெனி கம்பெனியாக ஏறி என்னைப்பற்றி விவரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!

அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’  - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!
அப்படியே திணறி நின்னேன்.. பாலா அண்ணன் சொன்ன அந்த வார்த்தைதான்.. ஒரே நைட்டில் மொத்த சீனையும்’ - ஆர்.கே. சுரேஷ் பேட்டி!

புதுப்பேட்டை கொடுத்த அனுபவம்

அதில் அவர் பேசும் போது, ‘எனக்கு நடிக்க வேண்டும் என்பது ஒரு கட்டத்தில் மிகவும் தீவிர ஆசையாக மாறியது. இதனையடுத்து நான் கம்பெனி கம்பெனியாக ஏறி என்னைப்பற்றி விவரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தில் நூறு பேரில் ஒரு அடியாளாக நடிக்கும் வாய்ப்பு. அதற்காக 2000 ரூபாய் அட்வான்ஸ் தொகையும் கிடைத்தது. இந்த நிலையில் அதை நான் வீட்டில் வைத்து பூஜை செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த என்னுடைய அப்பா என்ன இது என்று கேட்டார்; நான் விவரத்தைச் சொன்னேன்.

அப்பா அந்த காலத்திலேயே பல பிரபலமான திரைப்படங்களுக்கு ஃபினான்ஸ் செய்தவர் என்பதால் அவருக்கு திரைத்துறையில் ஓரளவுக்கு அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் படக்குழுவுக்கே போன் செய்து என்ன ரோல் என்று கேட்க அவர்கள் உண்மையை சொல்லிவிட்டார்கள். உடனே அப்பா அதெல்லாம் வேண்டாம் உனக்காக நான் ஒரு படம் செய்கிறேன் என்று கூறினார். இதற்கிடையில் நான் பிசினஸில் பிஸியாகிவிட்டேன்.

பாலா கொடுத்த வாய்ப்பு

சினிமாவுக்கு முயற்சி செய்வதை மறந்து விட்டேன் 2008 காலகட்டங்களில், நாளைய இயக்குநர் மூலமாக புதிய இயக்குநர்கள் உள்ளே வர ஆரம்பித்தார்கள். அவர்கள் இயக்கிய சில திரைப்படங்கள் மிகவும் விலை குறைவாக இருந்தன. இந்த நிலையில் அதை எடுத்து நான் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். அப்படியே என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினேன்.

அதன் வழியாகத்தான் பரதேசி படத்தை விநியோகம் செய்தேன். அந்த படம் கமர்சியலாக நன்றாகவே சென்றது. சில இடங்களில் நல்ல வருமானமும் வந்தது. இதனை நான் பாலா சாரிடம் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம்.

இந்த நிலையில் நான் அவரிடம் உங்களது திரைப்படத்தில் ஒரு சீனாவது நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். இந்த நிலையில் திடீரென்று என்னை அழைத்த அவர் தாடி வள என்று கூறினார் இந்நிலையில் நான்கு ஐந்து மாதங்களாக தாடி வளர்த்திருந்தேன்.

போட்டோ ஷூட் எடுக்க வேண்டும்

ஒரு நாள் கூப்பிட்டு போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது தாடியை எடுத்து விடு என்று சொல்லிவிட்டார். பின்னர் தாடி எடுத்தேன்.

இந்த நிலையில் படபிடிப்பு தொடங்கியது; இரவே எனக்கு படத்தினுடைய வசனங்களை கொடுத்து விட்டார்கள். நான் அதனை முழுவதுமாக படித்து தயார் நிலையில் இருந்தேன். இருப்பினும் முதல் நாள் சூட்டிங் என்பதால் கொஞ்சம் பயமாகவே இருந்தது. பாலா சார் டேக் என்று சொன்னவுடன் நான் வசனங்களை பேசினேன். கட் என்று சொன்ன பாலா வசனங்கள் அனைத்தையும் மாற்றி எழுதிக் கொடுத்தார். நான் திணறிவிட்டேன்.

இந்த நிலையில் என்னிடம் வந்த பாலா சார் எனக்காகவோ, உனக்காகவோ நடிக்காதே. நான் இன்று உனக்காக இரக்கம் பார்த்து நடி என்று விட்டு விட்டால் நீ ஸ்கிரீனில் செய்த தவறு பின்னாளில் உனக்கு பெரிய உறுத்தலாக மாறிவிடும். அதனால் நான் உனக்காக இதில் இரக்கம் பார்க்க முடியாது.

மேலும் படிக்க |

ஆகையால், ஒரு நடிகனாக மாற வேண்டும் நீ என்று ஆசைப்பட்டால் அதற்கெல்லாம் தயாராக இருந்து கொள் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை நான் டயலாக் பேப்பரை கையில் எடுப்பதில்லை. அதை அப்படியே மனதில் ஏற்றுக்கொண்டு பேசி விடுவேன். அன்றைய நாளும் அப்படித்தான் செய்தேன். இரண்டு நாள் எடுக்க வேண்டிய காட்சியை ஒரே இரவில் எடுத்து முடித்து விட்டோம். அந்த நாளை மறக்கவே முடியாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.