‘நான் பாவாடை கிடையாது.. டார்க்கெட் பண்ணி அடிக்காதீங்க.. பயமா இருக்குங்க..’ RJ பாலாஜியின் அனுபவ பேச்சு!
‘‘அவங்க படம் வந்தா, இவங்க அடிக்கணும், இவங்க படம் வந்தா அவுங்கள அடிக்கணும்னு ஏன் நினைக்க வேண்டும்? தேவையில்லாமல் ஏன் எனர்ஜியை வீணடிக்க வேண்டும். படம் நல்லா இல்லையா தாராளமா சொல்லுங்க. ஆனால், டார்க்கெட் பண்ணி அடிப்பது கொஞ்சம் பயமா இருக்கு’’

சொர்க்கவாசல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற படத்தின் நாயகன் ஆர்.ஜே.பாலஜி பேசும் போது, சுவாரஸ்யமான பல கருத்துக்களை தெரிவித்தார். இதோ அவருடைய பேச்சு:
‘‘ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏதாவது சர்சையாக பேசினால், அது படம் ரீச் ஆக உதவும் என்று பேசுவார்கள். நான் தனிப்பட்ட முறையில் நினைப்பது, பேச எதுவும் இல்லை என்றாலும், இப்போது நான் பேசும் விசயம் மக்களிடம் ரீச் ஆகும் என்று நினைக்கிறேன். நான் 2006ல் இருந்து ஒரு விசயத்தை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒரு பிஸ்கட்டை கடைக்கு விற்க கொண்டு சென்று விட்டோம் என்றால், அது நல்லா இருக்கா, இல்லையா என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், அந்த பொருள் வெளியே போய்விட்டது. சினிமாவும் அது மாதிரி தான்.
விமர்சனம் வந்து தான் ஆகும்
சினிமா என்கிற பிஸ்கட் வெளியே வந்துவிட்டால், அது நன்றாக இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம், ச்சீ.. இது ஒரு பிஸ்கட்டா என்று ஒருவர் சொல்லலாம், இன்னும் ஒருவர் 10 பக்கத்திற்கு மெயில் அனுப்பலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். யூடியூப்பில் பண்ணலாம், ட்விட்டரில் பண்ணலாம், இன்ஸ்டாகிராமில் பண்ணலாம் அது அவர்களின் சுதந்திரம்.