Suriya 45: கடுப்பாக்கிய தயாரிப்பாளர்.. அப்செட்டான ஆர்.ஜே. பாலாஜி.. சூர்யா 45 படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
Suriya 45: பிரமாண்ட செட் அமைத்து, அதில் நடிக்க வைப்பதற்கு ஜுனியர் ஆர்டிஸ்டுகளை கேட்ட எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் தராமல் இருந்துள்ளதாக கூறி சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் பேக்கப் செய்துள்ளாராம் படத்தை இயக்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கம் இயக்குநராக இருந்து வரும் பாலாஜ சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். சூர்பாய 45 என்ற அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரெட்ரோ ரிலீஸுக்கு பின் இந்த ஆண்டில் பிற்பகுதியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷுட்டிங்கை தொடங்காமல் பேக்கப் செய்த ஆர்.ஜே. பாலாஜி
சூர்யா 45 முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டுடியோவில்
பிரமாண்ட செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படத்துக்காக நீதிமன்றம் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக சுமார் 500 ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் வரை தேவை என படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளாராம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இயக்குநர் கேட்ட எண்ணிக்கையில் இருந்து பாதியளவு ஆர்டிஸ்ட்களை மட்டுமே அனுப்பி வைத்துள்ளராம். ஒரு முறை மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக இந்த செயலை செய்துள்ளாராம். கேட்டவற்றை கொடுக்காமல் படம் எப்படி எதிர்பார்த்தவாறு உருவாக்க முடியும் என கடுப்பாகியுள்ள ஆர்.ஜே. பாலாஜி ஒரு நாளில் ஷுட்டிங் தொடங்காமலேயே பேக்கப் செல்லியுள்ளாராம். இதனால் படத்தயாரிப்பாளருக்கு அன்றைய நாளுக்கு ஷுட்டிங் செலவாக சில லட்சங்கள் வீணாகியுள்ளது. இந்த தகவல் பிரபல காமெடி நடிகரான கோதண்டம் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
சூர்யா 45 படம்
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா, ஷிஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 2005இல் வெளியான ஆறு படத்துக்கு பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா - த்ரிஷா ஆகியோர் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் மற்றொரு முக்கிய கதாரபாத்திரத்தில் நடிக்க மன்சூர் அலிகான் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சில கமிட்மெண்ட்களால் விலகிய நிலையில் கட்சிசேர ஆல்பம் பாடல் புகழ் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநர் ரத்னகுமார், ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சூர்யா 45 படத்துக்கு மாஸ் டைட்டில்
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் நடித்த மாஸ் படங்களுக்கான டைட்டில் போல் இந்த படத்துக்கும் பேட்டைக்காரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வந்தன. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பொங்கல் விடுமுறையின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் டைட்டில் குறித்து இன்னும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. அதேபோல் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி தான், சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவலும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கான விடைகள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்