RJBalaji Vs Imman: ‘அவர் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை’ - இமானுக்கு மேடையில் பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rjbalaji Vs Imman: ‘அவர் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை’ - இமானுக்கு மேடையில் பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

RJBalaji Vs Imman: ‘அவர் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை’ - இமானுக்கு மேடையில் பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 01, 2024 06:56 PM IST

ஒரு சிறிய வேண்டுகோள். ஒரு திரைப்படம் உருவாவதற்கு படக்குழு எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் சின்னப்படம், பெரிய படம் என்றெல்லாம் கிடையாது.

ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இமான் அண்ணாச்சி, “  “இந்தப் படத்தில் எல்லா பெரிய கதாபாத்திரங்களும் முடித்த பின்புதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. கோகுல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் படம் என்றதும் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு சிறிய வேண்டுகோள். ஒரு திரைப்படம் உருவாவதற்கு படக்குழு எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் சின்னப்படம், பெரிய படம் என்றெல்லாம் கிடையாது. 

விமர்சனங்களை பொறுத்தவரை, நிறைய மீடியாக்கள் பாசிட்டிவாகத்தான் எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் கேமராவை முன்னர், பின்னர் பார்த்திருக்கிறார்களா?   என்று தெரியவில்லை. 

சில பேர் படம் குறித்த சில விஷயங்களை திரித்து பேசி இருக்கிறார்கள். அது வருத்தத்தை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஆகையால் விமர்சனங்களை சொல்லும் போது, நிறைகளை சொல்லிவிட்டு பின்னர் குறைகளை சொல்லுங்கள். இப்படி நீங்கள் செய்வது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

இதனையடுத்து மேடையில் பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி, “ இமான் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றாக விமர்சனம் செய்தால் மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். நாங்கள் நினைப்பதை நீங்கள் எழுதினால் மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்வது சரியல்ல. 

அது ஜனநாயகமே கிடையாது. மீடியாவில்,பத்திரிகைகளில் அவர்கள் எப்படி எழுத வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பது அவரவர்களின் சுதந்திரம். ஆகையால் அவர்களிடம் சென்று நீங்கள் பார்த்து எழுதுங்கள், பார்த்து பேசுங்கள் என்று சொல்வதில் உடன் பாடில்லை.” என்று பேசினார். 

மேலும் பேசிய இவர், “இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். 

“இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. 

படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். 

அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. ’சவுத் இந்தியன் அமீர்கான்’ என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட்.அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்." என்று பேசினார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.