தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rj Balaji Latest Interview About Animal Movie And Feminism In Singapore Saloon

Rj balaji latest interview: ‘பொண்ண அடிச்சு உதைச்சு.. இத பார்த்துதான் பசங்க..’ - அனிமல் படத்தை கிழித்த பாலாஜி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 18, 2024 05:30 AM IST

உண்மையில் நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. என்னதான் அதனை சினிமா என்று சொன்னாலும், ஒரு பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை, தியேட்டருக்குள் ஒரு கூட்டம் ரசித்து பார்ப்பதை என்னால் பார்க்க முடியாது.

ஆர்.ஜே. பாலாஜி!
ஆர்.ஜே. பாலாஜி!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “எங்களுடைய வீட்டில் என்னுடைய தாத்தா எல்லா வீட்டு வேலைகளையும் செய்வார். அவர் இல்லை என்றால் நான் செய்வேன். இப்படி வளர்ந்த எனக்கே, என்னுடைய மனைவி நான்கு நாட்கள் சமைக்கவில்லை என்றால் என்ன புருஷன் வேலைக்கு சென்று வருகிறேன்.. இவள் சமைக்காமல் இருக்கிறாள் என்ற எண்ணம் வரும். 

ஆனால் எனக்கு நானே, இப்படி யோசிப்பது சரியானது இல்லையே என்று சொல்லிக்கொள்வேன். காரணம் அவளும் வேலைக்குச் செல்கிறாள். அவளுக்கு தனியாக ஒரு தொழில் இருக்கிறது.

என்னுடைய வீட்டில் நான் பள்ளிக்குச் செல்லலாமா? இல்லை என்னுடைய தங்கை பள்ளிக்குச் செல்லலாமா என்ற கேள்வி வந்த போது, நான் பள்ளிக்கு செல்லலாம் என்ற முடிவை எடுத்தார்கள். ஆனால், எல்லோரும் படிக்கலாம் என்ற காலம் வர இத்தனைக்காலம் பிடித்திருக்கிறது.

உண்மையில் நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. என்னதான் அதனை சினிமா என்று சொன்னாலும், ஒரு பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை, தியேட்டருக்குள் ஒரு கூட்டம் ரசித்து பார்ப்பதை என்னால் பார்க்க முடியாது. 

ஒரு நாள் என்னுடைய நெருங்கிய நண்பன் வீட்டிற்குச் சென்று இருந்தேன். அவன் மகன் அழுதான். உடனே அவன் மிகவும் சத்தமாக நீ என்ன பெண்ணா... பெண் போல அழுது கொண்டிருக்கிறாய் என்று கத்தினான். இப்படி தொடர்ந்து சிறுவயதில் இருந்து அவனுக்கு ஊட்டப்படும் இந்த மாதிரியான விஷயங்கள்தான் அவனை அனிமல் போன்ற படத்தை ரசிக்க வைக்கின்றன.” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.